பிறப்பும், இறப்பும் சரி விகிதத்தில் இருக்கும் போது ஞானம் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக தான் இருக்கிறதே தவிர சரிவிகிதமாக இல்லையே.. ஏன் இந்த தாமதம்....?
ஞானம் தாமதிப்பதில்லை ஆனால், நாம் தான் தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.
புத்தத் தன்மையை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால், புத்தரைப் போல ஆக வேண்டும் எனபதில் தான் சிக்கல் இருக்கிறது.
ஞானத்தைப் பற்றிய ஏராளமான புனைக் கதைகளால் நாம் நிரபபப் பட்டிருக்கிறோம்.
அது தான் ஞானம் தெளிவதற்கு தடையாக இருக்கிறது.
ஞானிகள் அடைந்த பெயர், புகழ், நடை, உடை, பாவனை, அற்புதங்கள் செய்யும் திறன், இவைகளில் மட்டுமே பெரும்பாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.
மனமானது தந்திர உபயங்கள் நிரம்பியது. அதனால் தொடர்ந்து அது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்க முயற்சிக்கிறது.
நாம் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளாகவே பதிலும் இருக்கிறது.
ஆனால், மனம் நுணுகி செல்லாமல் மேலோட்டமாகவே நின்று கொண்டு கேள்வி வந்த உடன் புறத்தில் கேட்டக் கற்றுக் கொண்டிருக்கிறது.
ஏனெனில், கேள்வி கேட்பதும் ஞானம் என்று சொல்லப்பட்டிருப்பதால் கேள்வியே ஞானம் என்று தவறான முடிவுக்கு வந்துவிடும் பழக்கமாகிவிட்டது.
மனதிற்குள் பதிலை தயார் நிலையில் வைத்துவிட்டு தான் கேள்வியானது புறத்தில் எழுகிறது.
ஆனால், மனம் நுணுகி செல்ல மறுப்பதால் புறத்தில் தேடிக் கொண்டிருக்கிறது.
பதிலை தெரிந்த பிறகு கேள்வியும், பதிலும் வேறு வேறாக இல்லாமல், இணைந்தே இருபது தெரிய வரும்.
அப்படி தெரிய விடாமல் செய்வது மனம் தான்.
எப்படி என்றால், மனம் ஏதோ ஒரு வழியில் அடையாளங்களை பிடித்து வைத்திருக்கிறது.
அந்த அடையாளங்களை வைத்துக் கொண்டு பதிலை தேட முயற்சிப்பதால் தான் பதில் கிடைத்தும் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது.
இன்னும் வேறு ஒருவரிடம் கேட்டால் தெளிவு பிறக்கும் என்று எண்ணி வாழ்க்கை முழுவது தேடுதலிலேயே அலைந்து கொண்டிருக்கிறது.
மனம் தேடுதலை முடித்துக் கொள்ள தயார் நிலையில் இருப்பதில்லை.
இன்னும் கொஞ்சம் ஆழமாகவும், அகலமாகவும் செல்லலாமே என்று சமாதானம் செய்து கொண்டு தன் தந்திரத்தை உயிர்பித்துக் கொள்கிறது.
இது புரியாமல் நாமும் மனதின் வழியே சென்று பயணித்து காலத்தால் விரக்தி நிலையை மனம் எய்துகிறது.
அதன்பின் ஞானம் குழப்பம் என்ற முத்திரையும் கொடுத்து விடுகிறோம்.
இது யார் தவறு.....?
மனதின் தவறா....?
இல்லை ஞானத்தின் தவறா...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.