20/02/2018

யவத்மால் பருத்தி விவசாயிகளின் பரிதாப நிலை...


மொன்சாண்டோ நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட போல்கார்ட் III என்ற பருத்தி விதைகளை இந்தியாவில் விற்க முயன்றது.

இளஞ்சிவப்பு புல் புழுக்கள் இப்பருத்தியை தாக்காது என இந்நிறுவனம் விளம்பரம் செய்தது.

மக்களின் எதிர்ப்பு காரணமாக இவ்விதைகளை சந்தைப்படுத்துவதில்லை என்றும், 2020 ஆம் ஆண்டு போல்கார்ட் III விதைகளை விற்போம் என்றும் அறிவித்தது.

அரசு விதி முறைகளை மீறி எவ்வாறு முதல் பிடி பருத்தி விதைகளை விற்றதோ அதே முறையில் முறைகேடாக போல்கார்ட் III விதைகளையும் ஆந்திரா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 2000 ஆம் ஆண்டிலிருந்து விற்று வருகிறது.

இப்பருத்தி ஆள் உயரத்துக்கு மேல் வளர்கிறது. எப்புழுக்கள் தாக்காது என்று கூறினார்களோ அதே புழுக்கள் பருத்தி செடிகளைத் தாக்கியது.

இப்புழுக்களை கட்டுப்படுத்த தடைசெய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை கலந்து ஆள் உயர செடிகளில் தெளிக்கும் போது பூச்சி கொல்லிகளை தெளிக்கும் நபர்களே சுவாசிக்க நேரிடுகிறது.

அதன் விளைவாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் உடல் நலம் குன்றி படுக்கையில் உள்ளனர்.

மக்கள் மரணமடைந்தது மட்டுமல்லாமல் அவ்வளவு பருத்தி செடிகளும் நாசமடைந்து உள்ளன.

ஒவ்வொரு பருத்தி விவசாயியும் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் மகாராஷ்டிரா மாநிலம் பருத்தியால் ரூ.10,000 கோடி வரை இழந்துள்ளது.

பெற்ற அனுபவத்தால் இந்திய அரசு மரபணு மாற்ற விதைகளையும், அபாயகரமான பூச்சி கொல்லிகளையும் நிரந்தரமாக தடைசெய்யுமா?

விதி முறைகளை மீறி இவைகளை விற்றவர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.