இனிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...
ஸ்டெர்லைட் போராட்டம் பற்றிய என் தனிப்பட்ட கருத்துங்கள்...
1. நாம் ஒரு சினிமா பார்க்க தியேட்டருக்கு போறாம் என்றால் 6மணி காட்சிக்கு தூரத்தை பொருந்து சில மணிநேரத்திற்கு முன்பே கிளம்ப தயார் ஆகி, தியேட்டர் வந்து டிக்கெட் வாங்கிட்டு 5.40க்குள் தியேட்டருக்குள் சென்று விடுவோம்.
9மணியளவில் சினிமா நிறைவுப் பெறும், அப்புறம் வீட்டிற்கு வர தூரத்தை பொருந்து நேரம் ஆகும்.
2.30 மணி நேர மனமகிழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 5 முதல் 6 மணிநேரம் செலவிடுகிறோம்.
நம்முடைய ஊரில் நம் சந்ததியினர்கள் மனமகிழ்ச்சியாக வாழ நாளை(24/03/18) ஒருநாள் மாலை 4 முதல் 9 வரை நேரத்தை ஓதுக்கி குடும்பத்துடன் கலந்துக் கொண்டு போராடுவோமாக.
2.நான் போகவில்லை என்றால் என்ன மற்றவர்கள் கலந்து கொள்ளார்கள், எனக்கு ஏன் வீண் வம்பு என நினைக்காமால் குடும்பத்துடன் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
3.இப்படி போராட்டம் செய்தால் ஸ்டெர்லைட்-ஐ முடிவிடுவார்களா? என கேள்வியை சிலர் கேட்கலாம். இப்படி நம் முன்னோர்கள் நினைத்து இருந்தால் நாம் இப்போது இப்படி சுதந்திரமாக இருக்க முடியுமா என்பதை சிந்தித்து பாருங்கள்.
4.போராடினால் முடிவிடுவார்களா என்றால்? ஆம் முடிவிடுவார்கள்.
போராடினால் நாம் வெல்லலாம், வான் வீதியில் கால் வைக்கலாம் என்ற கூற்றுப்படி நாம் வெல்லாம்.
5.புரோட்டா கடைகளில் வழக்கத்தை விட சனிக்கிழமை-யில் அதிகளவு விற்பனை இருக்கும்போது, அவர்களே நாளை கடை அடைந்துட்டு குடும்பமாய் நாளைய மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அப்படியென்றால் நாம் நிச்சயமாக குடும்பத்துடன் கலந்துக் கொள்ள வேண்டும்.
6.நம் சந்த்தியினருக்கு சொத்துகளை சேர்கிறோம், அதுப்போல சுத்தமான காற்றை, சுத்தமான நீரை நம் சந்ததியினர் அனுபவிக்க வேண்டுமென நீங்கள் கருதினால் நாளைய மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்பிப்போம்.
7.நமக்கு ஏன் வம்பு என நினைக்காமல், நம் சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டுமென்று விரும்புகிறவர்கள், நாளைய ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறேன்.
8.நாளை ஒருநாள் ஆர்பாட்டம், வாழ்நாள் எல்லாம் இன்பமயம்.
9.போபால் விஷவாயு தாக்குதல் போல நம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூலமாக அழியாமல் இருக்க நாளைய மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிப்போமாக.
10.லண்டனில் போராட்டிடாங்க, ஐ.நா-வில் பேசிட்டாங்க, ஆதலால் நாம போகவில்லை என்றாலும் வெற்றி நிச்சயம் என நினைத்து வராமல் இருந்துவிடாதீர்கள்.
கேளுங்கள் தரப்படும் என்ற கடவுளின் கூற்றுபடி நாளைய மாநாடு மூலமாக அரசிடம் நாம் கேட்போம், நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.
மாநாட்டில் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பக்கவும், வெற்றிகரமான நடைபெறவும் எல்லாம் வல்ல இறைவரிடம் பிராத்திப்போமாக.
போராளியாக உங்களில் ஒருவனாக..
தேசியன்
ஆமா.அருண் விஜய் காந்தி
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இந்திய தேசிய இளைஞர் இயக்கம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.