30/04/2018

இலுமினாட்டி நமது நிலத்தில்...



1. இந்தியாவின் அடிமைத்தனும் விடுதலையும் ( Illuminati in Our land 1 : India's slavery and independence)..

இலுமினாட்டிகள் என்ற இந்த விழிப்புணர்வு மிக்க குழுவினர் தமிழர்கள் மீது தனிப்பட்ட பகை கொண்டவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழும் பழிதீர்ப்பு இது.

தற்பொழுது இந்தியாவிற்கு வருவோம். இந்தியா முழுவதும் தமிழர் வாழ்ந்த பகுதியே என்பது நாம் அறிந்ததே. 

இந்தியா என்பது சுதந்திரத்தினால்  உருவான ஓர் நாடு. நாடு என்பதை விட ஓர் நிறுவனம் எனலாம்.

சுதந்திரத்துக்கு முன் இது பல நாடுகளாக இருந்து.

அரசாட்சி இருந்தாலும் மக்கள் பொதுவாக மகிழ்ச்சியோடே வாழ்ந்தனர்.

கடந்த சில நூற்றாண்டுகளில் சில மேற்கத்திய அரசுகள் பல நாடுகளை தங்கள் காலணி ஆதிக்க நாடுகளாக மாற்றின.

நமது நிலமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரிட்டிசிடம் முழுமையாக மாட்டிக் கொண்டது.

பின் நம் விடுதலை மாவீர்கள் போராடி நமக்கு விடுதலை பெற்று தந்தனர்.

ஆனால் உண்மை என்ன என்றால் அந்த இந்திய கிழக்கிந்திய கம்பேனி ஓர் அரசு நிறுவனம் அல்ல..

அது ஓர் தனியார் நிறுவனம்.

இதன் உரிமையாளர் ரோத்சைல்ட் Rothschild..

இவன் இலுமினாட்டியில் முதன்மையானவன்.

சுதந்திர போராட்டம்..

இந்தியாவை வெற்றிகரமாக ஆட்சி செய்து கொண்டிருந்தது நிறுவனம். அப்பொழுது சில உண்மையான தேசிய விடுதலை வீரர்களான நேதாஜி போன்றோர்,  இது எங்கள் நாடு நீ வெளியேறு என முழங்கினர்.

ஆயித போராட்டங்களால் நிறுவனத்தின் சொத்துக்கள் அழிந்தன.

ஒத்துழையாமை இயக்கம் நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது.

இந்திய தேசிய இராணுவமும் நாடு கடந்த இந்தியாவின் முதல் இராணுவ பிரதமரான நேதாஜியும் ஜப்பானின் உதவியோடு இந்தியாவை மீட்க பயணமானார்.

முதலில் அந்தமான், கூட்டு இராணுவத்தினரால் கிழக்கு இந்திய கம்பேனியிடம் இருந்து மீட்கப்பட்டது அந்தமாண், ஓர் இராணவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும்.

18 நாடுகளை அப்பகுதியை பிடிப்பதன் மூலம் ஆட்சி செய்ய முடியும்.

மேலும் அங்கு உள்ள ஒரு சிறிய தீவு இலுமினாட்டிகளுக்கு மிக முக்கியமானது ஆகும்.

அங்கே தான் அவர்கள் தங்கள் இறையை வழிபடுகிறார்கள்.

அணுகுண்டு இந்தியாவுக்காக
இப்பொழுது அவர்கள் ஜப்பானுக்கு மிரட்டல் விடுத்தார்கள்.

இந்தியாவையும் அந்தமானையும் சுபாஸையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு திரும்பி போ இதுவே மிரட்டல்.  ஜப்பான் அடிபணிய மறுத்தது.

இரண்டு அணு குண்டுகள் ஜப்பானை தாக்கின. ஜப்பான் அவர்கள் சொன்னதை செய்துவிட்டு நாடு திரும்பியது.


சுதந்திரம் என்ற மாயை..

சுதந்திர போராட்டங்களால் நட்டம் அடைந்த கிழக்கு இந்திய நிறுவனம் ஒரு திட்டம் தீட்டியது.

ராக்ஃபெல்லரால் Rockefeller  உருவாகக்கப்பட்ட உளவியல் ஆய்வு மையம் ஒரு நல்ல யோசனை வழங்கியது அது தான் சுதந்திரம்.

மறைமுகமாக நாட்டை ஆட்சி செய்வது.

அதன்படி தீவிர விடுதலை போராட்ட வீரர்கள் கொலை செய்யப்பட்ட பின் பிள்ளை பூச்சிகளை வைத்து சுத்திரம் வழங்கி ஆட்சி அமைக்கப்பட்டது.

இந்தியாவை போன்ற பிற நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.

தற்போது இந்தியா சுதந்திரம் பெற்று விட்டதாக நம்பி மக்கள் மாயையில் வாழ்கின்றர். 

இலுமினாட்டிகள் தங்கள் 13 துறைகளை கொண்டு நாட்டை தற்பொழுதும் ஆட்சி செய்கின்றனர்...

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு…


திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.

இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற "துர்கானா ஏரி" கென்யாவில் உள்ளது.

ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு
பகுதி ஆவியாகிறது. மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.

கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது.

இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.

இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று "என்வைட்டினெட்". இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் "திரும்ப வராது" என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு
வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி
சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.

கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார்.

என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள் தான் போனதே தவிர
விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர்.

ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை.

பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.

இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார்.

அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்' என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.

பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி
வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது.

இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை...

ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த தினகரனுக்கு எதிராக ரூ.20 நோட்டை காட்டி பொதுமக்கள் போராட்டம்...


கொடைக்கானல் மெர்க்குரி ஆலை. அன்று நடந்ததும் இன்றைய நிலையும்.. கட்டாயம் படியுங்கள்...


ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அந்த நிறுவனம் வந்த புதிதில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. பெரிய பெரிய நகரங்களில் இருக்கக்கூடிய அளவுக்கு நமது ஊரும் மேன்மை அடையும், அனைத்து வசதிகளும் இந்தத் தொழிற்சாலையின் மூலமாகக் கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால், கிடைத்தது என்னவோ நோய்களும், உடல் ஊனங்களும்தான், நாங்கள் மட்டுமின்றி எங்கள் குழந்தைகளும் இதனால் காது கேட்காமல், கண் பார்வைக் குறைவோடு பிறக்கத் தொடங்கினர். காலம் கடந்த பிறகே புரிந்தது, இது நல்லதல்ல நஞ்சென்று.

வரலாற்றில் கறுப்புப் புள்ளிகளால் காலத்துக்கும் சுட்டிக்காட்டப்படுவார்கள். அப்படி ஒரு வலி மிகுந்த எழுத்துகளால் கூறப்பட்ட அநீதியைக்  கொடைக்கானலுக்கு இழைத்த யுனிலீவர் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின்  வரலாறு இன்றும் நம் மனதை உருக்கிக்கொண்டிருக்கிறது.
இது நடந்து 36 வருடங்கள் இருக்கும். வளர்ந்த நாடுகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் பற்றிய விழிப்பு உணர்வு வளர்ந்துகொண்டிருந்த தருணம் அது. அனைவரும் தத்தம் நிலத்தையும் வளத்தையும் காக்கவும், இதுவரை தங்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த தொழிற்சாலை உற்பத்திகள் அதேபோல் குறைவின்றிக் கிடைத்து பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவும் சில (சதி)திட்டங்களைத் தீட்டினர். அங்கே வேண்டாம் என்று நிறுத்தப்படும் அனைத்துத் தொழிற்சாலைகளையும் வளரும் நாடுகளுக்கு உதவி என்ற பெயரில் கொண்டுவருவது. வேலைவாய்ப்பு, மின், போக்குவரத்து, வெளிநாட்டுக் கடன்கள்  போன்ற வசதிகளின் மூலம் ஆசைகாட்டி அங்கே தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டன. மக்களுக்குப் புதுவிடியல் அளிக்க வந்த விடிவெள்ளிகள் போல் தம்மைக் காட்டிக்கொண்டார்கள்.

ஏன் கொடைக்கானல்?
உலோகங்களில் திரவ வடிவத்தில் இருக்கக்கூடியது மெர்க்குரி மட்டுமே. அதைத் தொழிற்சாலையில் பயன்படுத்தும்போது உறையவைப்பதற்கு என்று குளிரூட்டப்படும் வசதிகள் வேண்டும். அதற்குப் பெருமளவில் பொருள்செலவுகள் ஆகும். கொடைக்கானல் இயற்கையாகவே குளிர்ப்பிரதேசம் என்பதால் அதற்கான செலவுகளைக் குறைக்கலாம். முதலில் ஊட்டியைத் தேர்வு செய்தவர்கள் அங்குத் தேயிலை விவசாயம் தடையாக இருக்கும் என்பதால் இங்கு வந்தவர்கள் சோலைக் காடுகளுக்கு நடுவே ஆக்கிரமித்துக்கொண்டனர். மலைப்பிரதேசங்களில் மிகக் குறைந்த சம்பளத்துக்கு வேலையாட்கள் கிடைப்பார்கள் என்பது மற்றுமொரு காரணம்.

அனைத்தும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சிறிது சிறிதாக அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களுக்கு உடல்நலத்தில் மாற்றங்கள் தெரியத் தொடங்கின. அமெரிக்காவில் இருந்து மெர்க்குரி இறக்குமதி மூலம் தெர்மாமீட்டர் போன்ற உபகரணங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துகொண்டிருந்த அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களுக்குத் தொடர்ச்சியாக சிறுநீரகம், கல்லீரல் தொடர்பான நோய்கள் வரத்தொடங்கின. பலருக்கு மலட்டுத் தன்மையும் ஏற்பட்டிருந்தது. இந்தக் குறைபாடுகளுக்கு ஆட்பட்டு உயிர்ப்பலிகளும் நடக்கத்தொடங்கின. மெர்க்குரிக்கு எதிரான தமிழகக் கூட்டணி என்ற அமைப்பாகக் கூடிய சமூக ஆர்வலர்கள் அந்த ஆலை அதன் கழிவுகளைச் சரியான விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேற்றுவது இல்லை என்றும் அதனால் சூழல் சீர்கேடுகள் மற்றும் நீர் மாசுபாடுகள் ஏற்பட்டு அது மக்களின் உடல்நிலையைப் பாதிப்பதாகவும் பேசத்தொடங்கினார்கள். அப்பகுதியின் மிக முக்கியமான சோலைக் காடுகளுக்குள் அதன் கழிவுகள் குவிக்கப்படுவது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அரசாங்கம் எடுத்த நடவடிக்கையின் மூலம் நிரூபிக்கப்பட்டு 2002-ம் ஆண்டு அந்த ஆலை முற்றிலுமாக மூடப்பட்டது.

யுனிலீவர் நிறுவனத்தால் குவிக்கப்பட்ட 290 டன் கழிவுகள் அவர்களாலேயே அகற்றப்பட வேண்டும் என்று 2003-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாகத் தீவிரமாகப் போராடிய மக்களின் அழுத்தம் காரணமாக யுனிலீவர் நிறுவனக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நிறுவனமும்  மேம்போக்காகச் சில கழிவுகளை அகற்றிவிட்டு கணக்கு காட்டியது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அவர்கள் குறைக்க வேண்டியதாகக் கூறிய மாசு அளவு, அவர்கள் உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். அவற்றைச் சுத்தம் செய்ய சர்வதேசத் தொழில்நுட்பங்கள் தேவை மற்றும் பெருமளவில் பொருள்செலவுகள் ஆகும். அதனால் யுனிலீவர் நிறுவனத்தின்  செலவைக் குறைப்பதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இப்படிச் செய்தது.

அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கும் அவர்களது சந்ததிக்கும் பெங்களூரைச் சேர்ந்த அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தொடர்ச்சியாக இருந்த மெர்க்குரிக் கழிவுகளின் தாக்கம் அவர்களின் உடல்நிலையை தொடர்ச்சியாகப் பாதித்துக்கொண்டே இருந்தது தெரியவந்தது. ஆனால், நிறுவனமோ  அவர்கள் பணிபுரிந்த காலத்தில் இதுபோன்ற எந்தவிதக் குறைகளும் இல்லை என்று மருத்துவப் பரிசோதனை ஆய்வுகளை முன்வைத்தனர். இதனால் நிறுவனத்தின் முன்னால் ஊழியர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பாக ஒரு குழுவை நியமித்த நீதிமன்றம், இதை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னது. அந்த ஆய்வுக்குழு இப்போதைய உடல்நலக் குறைபாடுகளுக்கு அப்போதைய மெர்க்குரி ஆலைதான் காரணம் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

ஒரு சிறப்புக் கமிட்டி அமைத்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்திய ஆய்வில் முதல் தோற்றத்திலேயே தெரிகிற அளவுக்கு ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அந்த ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்குத் தொடர்ந்தது. 2011-ல் ஆய்வறிக்கை சமர்ப்பித்து தொடரப்பட்ட வழக்கு இன்னும் முடியவில்லை.

சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்தை இந்தியாவில் அதுவும் சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் தொடங்க அனுமதி கொடுத்தது மட்டுமின்றி, இன்றளவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கம்பெனிக்குச் சாதகமான முடிவுகளையே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆலை மூடிப் பதினான்கு ஆண்டுகள் கடந்து இன்னும் நிலம், நீர், காற்று அனைத்திலும் கலந்துவிட்ட அந்த மெர்க்குரி ஆலையின் மாசுகளால் பாதிக்கப்படும் பாம்பர் சோலா, வெள்ளகவி, கும்பக்கரை போன்ற ஊர்மக்கள் இன்றளவும் இந்தப் பாதிப்புகளுக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க வளரும் நாடுகளில் கார்ப்பரேட் பேராசைகளுக்குக் கொத்தாகப் பலியாகும் மக்கள் கூட்டத்தின் வரிசையில் இன்று கொடைக்கானல் வாசிகளும் நின்றுகொண்டு இருக்கிறார்கள். பிரச்னையின் சூட்டில் மக்களின் உணர்ச்சிகள் கொதிக்கும். அதன் சூடு தனியத் தனிய உணர்ச்சிகளும் தனிந்துவிடுகிறது. அதுவே பெருமுதலைகளின் பலமாக அமைந்துவிடுகிறது. அடுத்தவேளை உணவுக்கு ஓடும் மனிதனால் ஓரளவுதான் போராட முடியும்.

இதையே ஆயுதமாகக் கொண்டு அவர்களை அந்த நிலையிலேயே வைத்திருக்கும் தந்திரத்தைக் கையாண்டு மேன்மேலும் சுரண்டுகிறார்கள். அவர்களுக்கே அக்கறையில்லை என்று ஒதுங்குவதை விட அவர்களுக்காக நாம் கேள்வி கேட்பதே மனிதாபிமானத்தின் அடிப்படை தர்மமாகும்...

தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் போலீஸ் படையினர் திடீரென குவிக்கப்பட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...


தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மீத்தேன், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு போன்ற மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களுக்கு அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை ராணுவம் என்று அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சுமார் 2 ஆயிரம் பேர் டெல்டா மாவட்டங்களுக்கு திடீரென வரவழைக்கப்பட்டு, ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான மத்திய போலீஸ் படையினர் தங்கியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மத்திய போலீஸ் படை எதற்காக வந்திருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அவர்களை அழைக்கவில்லை. அவர்கள் எங்களிடம் எந்த உதவியும் இதுவரை கேட்கவில்லை’ என்றனர்.

இதுகுறித்து மத்திய உளவுத்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரொ கார்பன் எடுக்க புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது. அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்காக வடமாநிலங்களில் இருந்து அதிகாரிகளும், பெரிய அளவிளான இயந்திரங்களும் வரவழைக்கப்பட உள்ளன.

இந்த நேரத்தில் கட்டாயம் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறும். இதற்காக கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, தமிழக போலீஸாரின் பாதுகாப்பை மட்டும் நம்பியிருக்காமல் மத்திய போலீஸ் படை பாதுகாப்பும் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்பதால்தான் மத்திய போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியபோது, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மற்றும் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில் தமிழக போலீஸாருடன் இணைந்து மத்திய போலீஸ் படையினர் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.

மத்திய போலீஸ் படையின் டிஎஸ்பி இளம்பரிதி தலைமையில், ஆய்வாளர் சுபாஷ் முன்னிலையில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஆனால் தற்போது கூடுதலாக மத்திய போலீஸார் குவிக்கப்பட்டிருப்பது தமிழக போலீஸாருக்கு தெரிந்திருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை என்றார்...

விரைவில் மூன்றாம் உலகப் போர்...


Gaia Spacecraft...


நாம் இருக்கும் பால்வெளி மண்டலத்தின் மிகதுல்லியமான, தெளிவான 3Dimension கட்டமைப்பு வரைபடத்தை உருவாக்க தயார் ஆகிவிட்டனர் விண்வெளி ஆராய்ச்சியாளார்கள். 

European Space Agency[ESA] ஆனது கைய [Gaia] என்னும் செயற்கைகோளை வெற்றிகரமாக டிசம்பர் 19,2013 அன்று விண்ணில் ஏவியது, அது நிர்ணயிக்கப்பட்ட தனித்துவமான L2 என்னும் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக ஜனவரி 8,2014 ல் நிறுத்தப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இப்போது Gaia செயற்கைகோள் எதற்க்காக அனுப்பபட்டது ? அதன் வேலை என்ன என்பதை முழுமையாக பார்ப்போம்.

முன்பு கூறியது போல் பால்வெளி மண்டலத்தின் மிகதுல்லியமான, தெளிவான 3Dimension கட்டமைப்பு வரைபடத்தை உருவாக்க மற்றும் இது பால்வெளியில் உள்ள ஒரு பில்லியன் [10^9]  நட்சத்திரங்கள், கோள்கள், எரிகற்கள் போன்றவற்றின் தொலைவு, சுழற்சி, இயக்கம், திசைவேகம், ஒளிர்திறன், வெப்பநிலை, ஈர்ப்பு போன்ற பல தகவல்களை அறியவும் அவற்றை ஒரு கட்டமைப்பாக வகைப்படுத்தவும் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் தனிசிறப்புகள்...

1. இந்த space craft ஆனது பூமியிலிருந்து விலகி தனித்துவமான L2 [Lissagous] என்ற சுற்றுவட்ட பாதையில் 45 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது [படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது ].

2. இது ஐந்து வருடங்களில் சுமார் 1.3 பில்லியன் நட்சத்திரங்களை ஆராயவுள்ளது

3. இது ஓவ்வொரு நிமிடத்திற்கும் கிட்டதட்ட லட்சம் நட்சத்திரங்களை அளவிட கூடியது மற்றும் இது மொத்த வெளியும் இரண்டு மாதங்களில் ஆராயகூடியது.

4. இதில் உள்ள தொலைநோக்கியானது [Telescope] 30,000 ஒளியாண்டு தூரம் உள்ள நட்சத்திரங்களை மிக துல்லியமாக ஆராயகூடியது.

5. இது ஐந்து வருடங்களில் தனது ஓவ்வொரு இலக்கையும் 70 முறை ஆராய்ந்திருக்கும்.

6. இவை ஆராயும் அளவிடானது பால்வெளியின் ஒரு சதவிகிதம் மட்டுமே [1%]. 

Gaia என்னும் இந்த Spacecraft  ஆனது பால்வெளி அண்டத்தின் கட்டமைப்பு வரைபடத்தை உருவாக்கும் ஆரம்ப அடித்தள மட்டுமே இன்னம் பல ஆய்வுகள் செய்ய உள்ளனர்....

யார் துரோகி... பாஜக வில் இருப்பவர்கள் அனைவரும் தமிழான துரோகிகள்...


அறிந்து கொள்வோம் : கிராம சபை - பற்றிய சில முக்கிய தகவல்கள்...


1) உங்கள் பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் நீங்களும் கிராம சபை உறுப்பினரே.

2) மக்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சாயத்து தலைவர் எப்போது வேண்டுமானாலும் கிராம சபையை கூட்டலாம். ஆனால், மக்களுக்கு இதுபற்றி அறிமுகம் இல்லாததால், புதிய பஞ்சாயத்து ராஜ் யின் ஆரம்ப ஆண்டுகளான 1996 - 97-ல் கிராம சபைகள் நடைபெறாமல் இருந்தன.

3) கிராம சபைகள் கட்டாயமாக நடந்தாக வேண்டும் என்பது விதி. அதனால் தமிழக அரசு, வருடத்தில் 4 நாட்களுக்கு கிராம சபைகளை நடத்த வேண்டுமென அரசாணை கொண்டுவந்தது.

4) குடியரசு தினம் (ஜனவரி 26), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய நாட்களில் கிராம சபை நடைபெறுகிறது. இந்த நாட்களை தவிர மற்ற நாட்களில் கிராம சபை நடந்த மக்கள் விரும்பினால் நடத்திக்கொள்ளலாம்.

5) கிராம சபை கூட்டத்திற்கான குறைவெண் வரம்பு: 500 பேர் மட்டுமே உள்ள பஞ்சாயத்தில் 50 பேர் கிராம சபையில் கலந்துகொண்டால் போதுமானது. அவர்கள் இயற்றும் தீர்மானம் உச்சநீதிமன்றம் வரை செல்லுபடி ஆகும். அதேபோல், 3000 பேர் உள்ள பஞ்சாயத்தில் 100 பேரும், 10,000 பேர் உள்ள பஞ்சாயத்தில் 200 பேரும், 10,000 க்கும் மேல் மக்கள் தொகை உள்ள பஞ்சாயத்தில் 300 பேரும் கிராம சபையில் கலந்துகொண்டால் போதுமானது.

6) கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளர்ச்சி, நலன், கலாச்சாரம் ஆகியவைக்காக விவாதித்து, இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் அடிப்படை கூறுகளை மீறாமல் (மதச் சார்பின்மை, குடிமகனுக்கான அடிப்படை உரிமைகள்) தீர்மானம் நிறைவேற்றலாம். மதிப்பு மிக்க ஆவணம் கிராம சபை தீர்மானம்.

7) கிராம சபை நடக்கும் நாளுக்கும் அதற்கு முந்தய கிராம சபை நடந்த நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைகள், வரவு - செலவு கணக்கு ஆகியவற்றை கிராம சபையில் வாசித்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதை கூட்டத்தை ஒருங்கிணைப்போர் கட்டாயமாக செய்ய வேண்டும்.

8) கிராம சபை கூட்டத்தின் போது, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து பார்வையாளராக ஒரு அலுவலர் வருவார். அவர் பார்வையாளர் மட்டுமே. கூட்ட நடவடிக்கைகளில் குறுக்கிட அவருக்கு அனுமதியில்லை.

9) கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை இயக்குனர் (பஞ்சாயத்துக்கள்) மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குனர், சென்னை ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும்.
மிக முக்கியமானது, கிராம குடிமகனாகிய நாம், கிராம சபை தீர்மானங்களின் நகல்களை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்....

கட்சியே தன் அடையாளம் என நினைக்கும் அவர்கள் மட்டும் வெளி வந்து விட்டால் போதும்...


அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டெல்லி செங்கோட்டை டால்மியா குழுமத்துக்குச் சொந்தமாம்...


அடுத்தும் இவனுவழுக்கு ஒட்டு போட்டா மொத்தமா இந்தியா.வ வித்துட்டு போயிருவான்....

டால்மியா குழுமம் இதற்காக அரசுக்கு 25 கோடி வழங்கியுள்ளதாம்..

இதெல்லாம் என்ன கூத்து என்றே தெரியவில்லை.

இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை.

சரி, இப்போது செங்கோட்டையை டால்மியா குழுமத்துக்குக் கொடுத்து விட்டீர்கள். அடுத்து  எதைக் கொடுக்கப் போகிறீர்கள்?

நாடாளுமன்றத்தையா, உச்சநீதிமன்றத்தையா? என்று காங்கிரஸ் கட்சி சிட்டுரையில் குமுறியுள்ளது...

இந்தியா போரை தொடங்க போகிறது... திருப்பி அடிக்க தயாராகிக் கொள் எம் தமிழினமே...


திருட்டு திராவிடர்களே...


திருவள்ளுவர் தொடங்கி, அய்யா வைகுண்டர் , வள்ளலார் வரை தமிழர்களுக்கு அவர்களை எதிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழர்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்கள்...

அவர்களின் பாதையை விட்டு விலகி 80ஆண்டுகாலம் திராவிடத்தின் பின்னால் தமிழர்கள் சென்றதால் தான் தமிழர்களுக்கு மிகப் பெரிய இழப்புகள் ஏற்ப்பட்டன.

அதை உணர்ந்த தமிழர்கள் இப்போது தான் தமிழ்தேசியம் என்ற சரியான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

எனவே தான் திராவிடம் அவர்களால் விமர்சிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

இத்தகைய விமர்சனங்களுக்கு நீங்கள் உரிய பதிலை திராவிடர்கள் தரலாமே...

இந்த நீர் கூட விவசாயத்திற்கு கிடைப்பதில்லை...


திருட்டு திராவிடமே...


திராவிடத்தை யாரும் திட்டவில்லை. அதன் கொள்கைகள் தமிழர்களுக்கு எதிரானதாக இருப்பதால் விமர்சிக்கப்படுகிறது. அவ்வளவே.

மேலும் ஆரியத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே , அதனுடன் மறைமுகக் கூட்டணி வைத்து தமிழையும், தமிழரையும் ஒழித்துக் கட்டுவது தான் இதுவரை அது செய்து வந்துள்ளது.

இன்னொன்றையும் சொல்கிறோம், ஆரியம், பார்ப்பனீயம், பிராமணீயம் ஆகிய முன்றையும் இன்றுவரை தமிழர்கள் தான் முழுமூச்சுடன் எதிர்த்து வந்துள்ளார்கள்...

1920... ஆங்கிலேயர் காலத்திலேயே இந்திய ரூபாய் நோட்டுல தமிழ் இருந்திருக்கு ஆனா ஹிந்தி கிடையாது.... மோடி நம்ம ஊரு மைல் கல்லுல ஹிந்திய எழுத வர்றான்...


நாம் உண்மையை அறிய...


நாம் உண்மையை அறிய ஐம்புலன்களையே நம்புகிறோம்.

ஐம்புலன்களின் உதவி இல்லாமலேயே அவற்றால் அறிய முடிந்தவற்றைக் காட்டிலும் அதிகமாக, நுட்பமாக, துல்லியமாக சிலவற்றை அறிய முடியும் என்று சொன்னால் நம்புவதில் நாம் பெரும் சிரமத்தை உணர்கிறோம். காரணம் அதை எளிதில் விளக்கவோ, விளங்கிக் கொள்வதற்கோ முடிவதில்லை.

ஆனால் தாவரங்கள், விலங்குகள் கூட அசாத்தியமான, எப்படி முடிகிறது என்று விளக்க முடியாத பல அபூர்வசக்திகளைப் பெற்றுள்ளன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. இதில் சிலவற்றை முன்பே சிறிது சொல்லி இருந்தாலும் கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

1960களில் க்ளீவ் பாக்ஸ்டர் Cleve Baxter என்ற விஞ்ஞானி தாவரங்களை வைத்து சில பரிசோதனைகள் செய்தார். தாவரங்களில் polygraph electrodesஐ
இணைத்து செய்த பரிசோதனைகளில் தாவரங்கள் மனித எண்ணங்களை அறிந்து கொண்டு அதன்படி செயல்படுகின்றன என்பதைக் கண்டு பிடித்தார். அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற அவர் தயாரானபோதே அந்த செடி இலைகளில் அதற்கேற்ற ஒரு மாற்றம் உருவானதைக் கருவிகள் அடையாளம் காண்பித்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.

அவர் அதற்கு தீங்கு விளவிப்பது போல மனதில் கற்பனை செய்தால் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆராய, மனதில் அதன் இலைகளைத் தீப்பற்ற வைப்பது போல் மனதில் கற்பனை செய்தால் அதன் இலைகள் அதை உணருமா என்பதை அறிய முயற்சித்தார். ஆனால் அவர் கற்பனைக்கு வடிவம் தரும் முன்னேயே, அவருக்கு எண்ணம் எழுந்தவுடனேயே அந்தத் தாவர இலைகளில் அதற்கேற்றாற்போல் மாற்றம் பதிவானது அவருடைய ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தியது. அவருடைய தொடர்ந்த ஆராய்ச்சிகளில் தாவரங்கள் தங்களை அழிக்க வருபவர்கள் அருகில் வரும் போதும், தங்களை வளர்ப்பவர்கள் மற்றும் நேசிப்பவர்கள் அருகில் வரும் போதும் அதற்கேற்றாற்போல் வேறு வேறு விதமாக உணர்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். மனித எண்ணங்களை எப்படி தாவரங்கள் அறிகின்றன என்பதற்கு இன்னமும் சரியான விஞ்ஞான விளக்கமில்லை.

அதே போல் விலங்குகளில் நாய் மற்றும் குதிரை தங்கள் எஜமானர்களின் எண்ணங்களை உணர வல்லவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைகளுக்குத் தகுந்தபடி நடந்து கொள்கின்றன என்று சொல்கிறார்கள். நாய்களை மிகவும் நேசித்து வளர்த்துபவர்கள் வீட்டிற்குச் சென்றால் அவர்களுடைய நாய்கள் எந்த அளவு புரிந்து கொண்டு நடக்கின்றன என்பதைக் கதை கதையாய் சொல்வார்கள்.

அதே போல் வேட்டைக்குச் செல்பவர்களும் விலங்குகளின் சில விசேஷ நடவடிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். காடுகளில் விலங்குகளை வேட்டையாட அவர்கள் மறைந்து பதுங்கி இருக்கும் போது மோப்பத்தினால் கூட அவை அறிய முடியாத தூரத்தில் வரும் போதே ஏதோ ஒரு விதத்தில் அபாயத்தை உணர்கின்றன என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறார்கள். பார்க்க முடியாதபடி மறைந்திருந்தாலும், மோப்பம் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும் அவை ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டு, பின் சிலிர்த்துக் கொண்டு அந்த வழியே வராமல் வேறு வழியாகப் பயணிப்பதைத் தெரிவிக்கிறார்கள். ஒரு சில விலங்குகள் அபாயத்தை எதிர்கொள்ளும் போது எழுப்பும் ஒலியை அந்த சமயங்களில் எழுப்பி விட்டுச் செல்வதாகவும் சொல்கிறார்கள். இது போன்ற அபாயத்தை உணரும் அபூர்வ சக்திகளை காட்டு விலங்குகள் அதிகம் பெற்றிருப்பதாகவும் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் காலப்போக்கில் அந்த சக்திகளை இழக்க ஆரம்பித்து விடுவதாகவும் விலங்கின ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

ஒரு தாவரமோ விலங்கோ கூட மனிதனின் நோக்கத்தையும், எண்ணத்தையும் அறிவிக்காமலேயே அறிந்து கொள்கின்றன என்றால் மனிதன் இன்னொரு மனிதனின் எண்ணங்களையும், நோக்கங்களையும் சொல்லாமலேயே தெரிந்து கொள்வதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆதிமனிதன் இன்றைய மனிதனைக் காட்டிலும் இது போன்ற அபூர்வ சக்திகளை அதிகம் பெற்றிருந்தான் பயன்படுத்தினான் என்றே சொல்லலாம்.

சிட்னி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஏ.பி.எல்கின் Dr. A.P. Elkin என்பவர் ஆஸ்திரேலிய நாட்டின் பழங்குடி மனிதர்களான புதர்மனிதர்கள் எனப்படுபவர்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அந்த புதர்மனிதர்கள் காணாமல் போன பொருட்களையும், வழிதவறிப் போன ஆடுமாடுகளையும், திருடர்களையும் அனாயாசமாகக் கண்டு பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.

அவர் எழுதிய Aboriginal Men of High Degree என்ற புத்தகத்தில் அந்தப் புதர்மனிதர்களை ஆராய்ச்சி செய்ய ட்ரெக்கிங் சென்ற போது அவர் வருகையையும், வரும் நோக்கத்தையும் அவர்கள் முன் கூட்டியே அறிந்து வைத்திருந்தனர் என்று கூறுகின்றார். பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அவர்கள் மற்ற பகுதிகளில் வசிக்கும் அவர்களது வேண்டப்பட்டவர்களின் மரணத்தையோ, உறவினர்கள் வீட்டில் குழந்தை பிறப்பதையோ உடனடியாக அறிந்தார்கள் என்றும் கூறுகிறார். அவரிடம் அந்த புதர்மனிதர்கள் “எண்ணங்கள் பார்க்க முடியாதவையாக இருந்தாலும் அவற்றைக் காற்று வெளியில் அனுப்புவதும் பெறுவதும் எளிது” என்று தெரிவித்தார்களாம்.

அவருடைய புத்தகத்தால் கவரப்பட்டு லிண்டன் ரோஸ் Lyndon Rose என்ற மனவியல் நிபுணர் அந்த புதர்மனிதர்களை வைத்து மேலும் பல பரிசோதனைகள் செய்தார். மூடிய பெட்டிகளில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத விடைகளை அவர்கள் சரியாகச் சொன்னார்கள். சரியாகச் சொல்லாத பொருட்கள் கூட பெரும்பாலும் இதுவரை அந்தப் பழங்குடியினர் கண்டிராத பொருட்களாக இருந்தன.

ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக எண்களைக் கையாலேயே கூட்டி கணக்கிடும் பழக்கம் இருந்தது. சில வயதான கணக்குப் பிள்ளைகள் இப்போதும் ஒரு முறை கூட்டும் போதே சிறு பிழை கூட இல்லாமல் கூட்டி கணக்கிடுவதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம். ஆனால் கால்குலேட்டர் உபயோகப்படுத்தப்படும் இக்காலத்தில் அந்தக் கணக்கிடும் திறனை இழந்து விட்டிருக்கிறோம். மிக எளிய இரண்டு எண்களைக் கூட்டக் கூட நமக்கு கால்குலேட்டரே தேவைப்படுகிறது. அதே போலத் தான் எந்தத் திறமையும், சக்தியும், நாம் உபயோகிக்காமல் விட்டு விட்டால் காலப்போக்கில் அந்தத் திறனை முழுமையாக இழந்து விடுகிறோம்.

அப்படித்தான் எத்தனையோ இயல்பான ஆழ்மன சக்திகளை மனித சமுதாயம் இழந்து விட்டிருக்கிறதோ? சிந்தியுங்கள்...

தமிழின துரோகி மானங்கெட்ட பாஜக பொன் ராதா நீ மூடிட்டு போ...


ஆங்கிலேயன் சாதித்தது நம்மால் முடியாதா?


தமிழர்நாடு வல்லரசாகும், பேரரசாகும் என்று நாம் சொன்னால் சிரிக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தை விட சிறிய நாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயர்தான் உலகிலேயே பெரிய பேரரசை உருவாக்கி ஆண்டனர் என்ற உண்மை தெரியுமா?

வரைபடத்தில் சிவப்பாக இருப்பது 1922ல் ஆங்கிலேயர் ஆண்ட பகுதி.

வெள்ளைப் பகுதி அவர்கள் படையெடுக்காத நாடுகள்.

பச்சை நிறம் அவர்கள் தாய்நிலம்.

உலகில் கால் பகுதி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.

உலக மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்தனர்.

உலகில் ஏறத்தாழ 200 நாடுகள் உள்ளன.
இதில் ஆங்கிலேயர் படையெடுக்காத நாடு வெறும் 22 மட்டுமே.

அவை,
Andorra, Belarus, Bolivia, Burundi, Central African Republic, Chad, Congo, Republic of Guatemala, Ivory Coast, Kyrgyzstan, Liechtenstein, Luxembourg, Mali, Marshall Islands, Monaco, Mongolia, Paraguay, Sao Tome and Principe, Sweden, Tajikistan, Uzbekistan, Vatican City.

அதாவது உலகத்தில் 90% நிலப்பரப்பு அவர்களால் படையெடுக்கப்பட்டு கைப்பற்ற முயற்சி நடந்துள்ளது.

33 கோடி பேர் இருந்த பிரிட்டிஷ் இந்தியாவை (இன்றைய இந்தியாவை போல்  ஒன்றரை மடங்கு) வெறும் ஒரு லட்சம் வெள்ளையர்கள் ஆண்டனர்.

ஆக தாய்நிலமோ மக்கட்தொகையோ முக்கியமில்லை.

பிற நாடுகளை அடக்கி பேரரசாக வரவேண்டிய எண்ணம் கூட நமக்கில்லை.

நம் தாய்நிலத்தை நாம் முப்படைகளுடன் எவரும் அடிபணியாமல் ஆள நினைக்கிறோம்.

இது முடியாதா?

ஆங்கிலேயர் ஒருகாலத்தில் ரோமானியப் பேரரசிடம் அடிமையாக இருந்தது போல தற்போது நாம் இருக்கிறோம்.

நம்மால் ஏன் முடியாது?

பாஜக ஆர்எஸ்எஸ் கலாட்டா...


புதிய கட்சிகள்/தலைவர்களின் கவனத்திற்கு...


1. மனதை கவரும் செயல்பாட்டு வரைவுகளை (தேர்தல் வாக்குறுதி) மக்களிடம் கொண்டு செல்வதால் மட்டும் பயனில்லை..

2. அதில் குறிப்பிட்டதை நிறைவேற்ற கால அவகாசம் எவ்வளவு தேவை என்பதையும், அதற்குள் நிறைவேற்றாவிட்டால் உமது ஆட்சியை தூக்கி எறிவது எப்படி என்பதையும் குறிப்பிடவும்..?

3. தயார் எனில் அதற்கான உறுதிமொழி பத்திரத்தை வாக்கு சேகரிக்கும்போது கொடுக்க முடியுமா..?

4. ஆட்சியை பிடித்தவுடன் உமது/உமது ஆதரவாளர்களின் நிலை மாறினால் என்ன தண்டனை கொடுப்பது..!

5. எந்த ஒரு திட்டத்தையும் தொடங்குமுன் (ரூ.1 முதல் பல ஆயிரம் கோடிகள் வரை) மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றால் மட்டுமே நிறைவேற்றுவது..

6. உமது வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வாழ்வில் ஒருமுறைக்கு மேல் (5 வருடங்கள்) அரசியல்வாதியாக பதவி வகிக்க கூடாது..

7. வருட வருமானம் 3 லட்சத்திற்குள் இருப்பவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்..

8. முந்தைய ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி அவர்களை சிறையில் அடைக்க தயாரா..? இதை செய்தாலே பல ஆண்டுகளுக்கு வரி வசூலிக்காமல் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும்.

9. அல்லது சிலநூறு கோடிகளுக்கு நீயும் விலை போய் விடுவாயா..?

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது...


தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது.

சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும், செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது, கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு, கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன...

சித்தராவது எப்படி ? - 17...


அன்பே நிகழ் காலம் என்றால் அதுவே உண்மையாகும்...

தோல்விகளில் துவண்டு கிடக்கின்ற மனிதன், உலகத்தாரையும் உலக சார்புகளையும் தான் குறை கூறி கொண்டு இருக்கின்றானே தவிர தானே அந்த தோல்விக்கு முழுக் காரணம் என்பதை ஒருபோதும் அறிவதில்லை..

கடவுள் சன்னதியில் புலம்பி அழுகின்றான்.. தன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் புலம்பும் மனிதனுக்கு நிகழ் காலத்தில் வாழும் அன்பே வடிவான இறைவன் அந்த நொடியே தீர்வு தருகின்றான்..

ஆனால் நிகழ் காலத்தில் வாழ தெரியாத மனிதன், தனக்கு கிடைத்ததை அடையாளம் காண முடியாமல், இறைவன் கொடுத்த அத்தனையும் புறகணிக்கின்றான்..

இறைவன் நிகழ்காலத்தில் இருகின்றான் என்பதை புரிந்து கொள்ள மனிதனுக்கு முடிவதே இல்லை..

காரணம் கடந்த கால அனுபவமான எண்ண ஆதிக்கத்தில் அடிமையாக உள்ள மனிதன் நிகழ் கால சுதந்திரத்தை அனுபவிக்கவே முடிவதில்லை..

நிகழ் காலமே சிவம் நிலை என்று எத்தனை சிவ பாடல்களை கற்றாலும், மனிதன் சவ நிலை நோக்கி தான் திரும்பி பார்த்து பயணப் படுகிறான்...

நிகழ் காலத்தில் நிற்க தெரியாத, நிற்க முடியாத மனிதன், இறைவன் கொடுக்கும், கொடுத்துக் கொண்டே இருக்கும் நிலையை உணர முடியாத அவல நிலையில் உள்ளான்..

எப்பொழுதோ ஒருவேளை குருட்டு வாக்கில் நிகழ் காலத்தில் விழும் போது, இறைவனுடைய அருளை பெறுகின்ற போது, தனக்கு எந்த நிலையில் அது கிடைத்தது என உணர முடியாமல் தவிக்கின்றான்..

நான் பெற்றேன் பெற்றேன் என பூரித்து மகிழும் பக்தன் பெற்றுக்கொண்டு இருக்கின்றேன் என்று மகிழ்வோடு இருப்பதை காணவே முடிவதில்லை..

பக்தியின் உச்சத்திலே பயணப்பட்ட பிரசித்தி பெற்ற பக்தகோடிகள் நிலையும் அப்படியே....

காரணம் நிகழ் காலத்தில் நொடி பொழுது கூட நீடிக்க முடியாத மனிதன், எதிர் காலத்திற்கோ அல்லது கடந்த காலத்திற்கோ சென்று விடுவதால் நிகழ் கால பெருமை, அதனுடைய மகிமை அறியாது போய் விடுகிறது..

நிகழ் காலத்தை பற்றி எவ்வளவு தான் கேட்டாலும் அதை கடந்த கால அனுபவ நிலையாகிய எண்ண ஆதிக்கங்களில் கேட்பதால் நிகழ் கால செய்திகள் கடந்த கால வண்ணம் பூசப் பட்டு அந்த செய்திகளின் உண்மை நிலை கெட்டுப் போய் விடுகிறது..

எண்ண ஆதிக்கங்களால், இறைவனே சத்தியத்தை வழங்கினாலும், அது பலன் அற்று போய் விடுகிறது..

ஆகவே மனிதன் எண்ண ஆதிக்கம் எதுவும் அற்ற தோன்றா நிலை அனுபவமாகிய நிகழ் காலத்தை அனுபவப் பட வேண்டிய அவசியம் முதலில் தேவைப் படுகிறது...

அப்பொழுத்து தான் நிகழ் காலத்தில் அகப்படும் இறைவன் தரிசனம் நமக்கு கிடைக்கும்... பிரபஞ்ச ஆற்றலுடன் இணைவதே இறை தரிசனம் ஆகும்.. அதுவே நிகழ் காலம் ஆகும்... அதுவே எல்லா செய்யக்கூடிய, செய்யும், செய்யப் போகும் மூலாதாரம் ஆகும்..

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்று ஆகும்.. நிகழ் காலம் என்பது அந்த ஒன்றே..

நமக்கு ஒரு சொகுசு கார் வேண்டும் என்று விரும்புகிறோம்.. இறைவனிடம் மண்டியிட்டு, அழுது, பிரார்த்தனை செய்கிறோம் .. இறைவன் நேரில் வந்து எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அதை நான் தருகிறேன் என்று சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்..

கார் என்ற ஒன்றிலே கற்பனையில் திளைத்து சதா காலமும் பிரார்த்தனை பண்ணிய மனம், கார் என்ற எண்ண பதிவில் பலமான காரணத்தினால், கார் ஒன்றை தவிர வேறு எதுவும் வேண்டாம்  என்று சொல்லும்..

இறைவன் நம்மை ஏதோ ஒன்றை சொல்லி ஏமாற்றி விடுவானோ என்ற ஐயப்பாட்டில் அனைவரும் கார் வேண்டும் என்றே கேட்பார்கள்.. பின் கார் சம்பந்தப்பட்ட அனைத்தையும், ஒன்றன் பின் ஒன்றாக கேட்டு பிரார்த்தனை செய்ய தொடங்குவார்கள்...

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டும் பெற விரும்பவே மாட்டார்கள்...

இறைவனுடைய விருப்பமே மனிதனுடைய பூரண தேவைகளை பூர்த்தி செய்யும் கருணையை உடையவன்.. ஆனால் அவன் விருப்பத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. எண்ண ஆதிக்கங்களால் நம் விருப்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பெற வேண்டியதை பெறாமல் குறைவுபட்ட ஒன்றையே பெற்று பெற்று அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறோம்..

எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சரணாகதியில் இறைவன் முன், இறைவன் கொடுக்க நினைப்பதை அந்த நிகழ் காலத்தை இழந்து, கடந்த கால எண்ணப் பதிவுகளில் சிக்கி, எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒரு அரிய, அற்புத ஒன்றை பெறாமல், அற்ப சொற்பமான ஒன்றை பெற்றுக் கொண்டு அல்லல் அடைகின்றோம்...

இப்படியாக நிகழ் காலத்தின் பெருமையை உணர்ந்து நிகழ்கால தொடர்பு உள்ளவர்களை தான் சிவநிலை பெற்றவர்கள் என்கிறோம்...

இப்படி இருப்பவர்கள் தான் அன்பு என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இருப்பார்கள்..

வற்றாத செல்வம் உடையவர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு வாரி வழங்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்..

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை நிகழ் காலத்திலே இறைவனிடம் பெற்றவர்கள் மட்டுமே வற்றாத செல்வம் பெற தகுதி பெற்றவர்கள்..

அதனால் அன்பும் நிகழ் காலமும் ஒன்று என அறியும் அறிவு நமக்கு வேண்டும்.. அந்த அறிவு தோன்றா நிலையில் மட்டுமே பெற வாய்ப்பு உள்ளது...

மனிதன் நிகழ் காலத்தில் இருக்கின்றான் என்றால் அவன் தோன்றா நிலையில் பூரண சரணகதி தத்துவத்தில் இறைவன் முன்நிலையில் எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்றை கிடைக்கப் பெற தகுதி உடையவன் ஆகிறான்..

அந்த ஒன்று வேறு ஒன்றும் இல்லை.. அது எல்லாம் வல்ல பிரபஞ்ச ஆற்றல் தான் என்று சொல்லவும் வேண்டுமோ ?

நிகழ் காலத்தில் இருந்து பிரபஞ்ச ஆற்றலை பெற முடியாதவர்கள், அன்பை பற்றி பேசலாம்.. ஆனால் அன்பாய் இருக்க முடியாது..

காரணம் அன்பாய் இருக்கும் தகுதி அவர்களுக்கு இல்லாததே...

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்று பெறாததாலே, கொடுக்கும் தகுதியை இழந்து விடுவதால், அவர்கள் அன்பாய் இருக்க முடியாது..

நிகழ் காலத்தில் ஆற்றலோடு அறிவும் பெறுவதால் தேவையான இடத்தில், தேவையான நேரத்தில் தங்கள் அன்பின் செயல் பாட்டினை வெளிப் படுத்துவார்கள்..

முடிவாக நிகழ் காலத்தில் மட்டுமே இறைவன் இருக்கிறான்; நிகழ் காலத்தை கெடுப்பது கடந்தகால எதிர்கால எண்ண ஆதிக்கங்கள்.

நிகழ்காலத்தில் பெற்ற ஆற்றலால் மட்டுமே ஒருவன் சகலத்தையும் பெற முடியும்; அப்படி பெற்றவன் ஒருவனே அன்பாய் இருக்க முடியும்; இதனால் அன்பே நிகழ் காலம் என உணரப் படுகிறது...

நிகழ் கால தொடர்புக்கும் சித்தர்களுக்கும் மிக நெருக்கம் உள்ளது.. அவர்கள் அளவற்ற ஆற்றலை நிகழ் கால தொடர்பின் மூலமே பெற முடிந்தது...

மேற் சொன்னவற்றை நன்கு நினைவில் கொண்டு தோன்றா நிலையில் இருக்கும் கால அளவினை படிப் படியாக பயிற்சியின் மூலம் விரிவாக்கம் செய்து அன்பே வடிவாய் சித்தராக முனைவோமாக....

தடுப்பூசி உண்மைகள்...


மனம் என்றால் என்ன்.?


மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது.
 
ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம் தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது.

இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.

ஓர் அறிவாய் இருக்கின்ற போது உணர்வை பெறுகிறது.

ஈரறிவாய் இருக்கின்ற போது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.

3வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.

4வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.

5வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,

6வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.

இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது.

ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இது தான் ஆறாவது அறிவு.

இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.

இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது.

ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும்.

மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான்.

ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது.

இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப் பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான்.

ஆகவே தான் மனிதப்பிறவியில் அதே நிலையில் இருப்பதால்தான் இறைத் தன்மையை அறிய முடியாமல் தவிக்கிறது...

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்து விடுமாம்...


மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால்
கட்டப்பட்டது.

1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’
விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.

இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவற விட்டுவிடக் கூடாது.

இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம்.

இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச் சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஹரிஷ் சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம்.

இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலங்கம் ஒன்று அமைந்திருக்கிறது. 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது.

அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக
இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது.

அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம்.

மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன.

இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும்
ஒவ்வொரு தூணாக இடிந்து விழும்.

அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து விடும் என்று நம்பப்படுகிறது.

அந்த நாளில் இந்த உலகமும் அழிந்து விடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது...

மருத்துவ மாப்பியா - தடுப்பூசி உண்மைகள்...


ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி - 10...

சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 10-ம் பகுதியாகும். இது பல்வேறு குறிப்புகள் அடங்கிய தீர்க்கதரிசனப் பகுதியாகும்.


இந்த 10-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கத்தரிசனம் என்னவெனில் தமிழகத்தில் இயற்கையின் சீற்றங்கள் 90% இருக்கும் எனவும், இது வடதமிழகம், தென்தமிழகம் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் புயல், மழை, சூறாவளிக் காற்று, கடல் சீற்றம் என இருக்கும்படி அமைய உள்ளதாக இந்த 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



மலேசியா நாட்டில் வரலாறு காணாத அளவில் மழை பொழிந்து பலத்த சேதங்களை அங்கு ஏற்படுத்தும் என்றும், இது ஒரு வரலாற்று சோகம் போல் அமையும் என சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



அமெரிக்க நாட்டில் வரலாறு காணாத அளவு மழையும், பனியும் இருக்கும் எனவும், கடல் பொங்குதல் போன்ற நிகழ்வுகள் இனி அங்கு அதிகமாக காணப்படும் என்றும், மக்களின் இறப்பு சதவீதம் அங்கு அதிகமாக காணப்படும் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


உக்ரைன் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு புயலால் பெரும் பாதிப்புகள் ஏற்பட இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


தமிழக அரசியலில் இனி பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கும் என்றும், தமிழக நடிகர்களின் பங்கீடுகள் அதிகமாகவே காணப்படும் என்றும், இதனால் நாட்டு மக்கள் வேதனைப்படும் அளவிற்கு கூச்சல், குழப்பங்கள் தற்போது நிலவ உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் தமிழகத்தின் அவல நிலையை படம்பிடித்து காட்டுகிறது.

பாமரனும் பதவி ஏற்கும் ஆசையில் பல வினோத கருத்துகளை இணையதள வாயிலாக அறிக்கைவிடும் படுகேவலமான அவல நிலை இனி தமிழக அரசியல் களத்தில் நிகழ உள்ளதாகவும், இனி தமிழகத்தில் புதுப்புது கட்சிகள் நிறைய உதயமாகிட உள்ளதாகவும், இதனால் உலக மக்களே தமிழகத்தை திரும்பி பார்க்கும்படி பல மோசமான நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்க இருப்பதாக நமது சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு குறிப்பை தெரிவிக்கின்றது.


வரும் ஆவணி மாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக தமிழக மக்கள் எண்ண வேண்டும் என்றும், இந்த மாதத்தில் தமிழகத்தில் பல தெய்வீக அதிசய நிகழ்வுகள் இந்தியா முழுவதும் நடக்க இருப்பதாக தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.


மும்பை மிகுந்த மழை சேதங்களை சந்திக்க உள்ளதாகவும், 35 % வீதம் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை இழக்கும் சூழல் உருவாக இருப்பதாக நமது சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.


இனி தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் தற்போது வரக்கூடிய “சத்திய யுகத்தை“ பற்றி விளக்கங்கள் கூறும் கல்வெட்டுகளாக இருக்கும் என 10-ம் தீர்க்கதரிசனம் இங்கே தமது கருத்தை பதிவு செய்கிறது.


பதஞ்சலி எனும் அமைப்பு இனி மக்களால் அடையாளம் காணப்படும் என்றும், அதனுடன் கைகோர்த்துள்ள பிற அமைப்புகளைப் பற்றி குறிப்புகள் இனி செய்தி ஊடகங்கள் வாயிலாக செய்திகளாக வெளியிடுவார்கள் என்றும், இதனால் இந்திய தேசத்தில் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாக இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


வீர மன்னன் சிவாஜி வாழ்ந்த ஊரில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்படும் என்றும், அக்கல்வெட்டில் பல குறியீடுகள் பொறிக்கப்பட்டு இருக்கும் என்றும், அதில் மிகப்பெரியதாக ஒரு குறியீடு இருக்கும் என்றும், அது ஆதிசக்தியின் இரகசிய குறியீடாக அமைந்திருக்கும் என்றும், அதனை மக்கள் இனி எங்கு, இந்த குறியீடு காண முடியும் என்று தேடுவார்கள் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சோழவந்தான் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், அங்கு இனக்கலவரங்கள் அதிகம் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


ஜப்பான் நாட்டில் ஆழிப்பேரலைகள் தாக்கும் மிக கொடுரமான சோகச் சம்பவம் ஒன்று தற்போது ஏற்பட போவதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


கோடைவாசஸ்தலம் ஒன்று மிகப்பெரிய பூமி அதிர்வால் பூமிக்குள் அமிழப் போவதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தெரிவிக்கின்றது.


மரித்தவர், எழுந்தவர், தோன்றியவர் என்ற சொற்களுக்கு (அடைமொழியாக) உரிய இயேசுவின் இரண்டாம் வருகை தமிழகத்தில் தான் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒரு விஷயம் என்றும், இது மிக, மிக அருகில் நடக்கும் ஒரு சுப நிகழ்வு என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


கடல்கன்னிகள் என்ற கதாபாத்திரங்கள் நிஜம் என்று நிருபிக்கும் வகையில் இந்த கடல்கன்னிகளை மக்கள் தங்களது புறக்கண்களால் காணும் பாக்கியத்தை அடைவார்கள் என்று 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.  கடல்கன்னிகள், அரிய கடல்வாழ் உயிரினங்கள், அவைகளின் வசிப்பிடங்கள் போன்ற செய்திகள் இனி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் சமயத்தில், வேற்று கிரகவாசிகள் இம்மண்ணில் நிலையாக இறங்குவார்கள் என்றும், இதனால் இப்பூமி பல வியத்தகு ஆச்சர்யங்களை சந்திக்க உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட தனது கருத்தை எடுத்துக் கூறுகிறது.


அலவாய் மலை இனி பிரசித்திப் பெறும் என்றும், அம்மலையில் சித்தர்களின் நடமாட்டத்தை இனி பல மக்கள் காண்பார்கள் என்றும், “குதம்பை“ எனும் சித்தரின் அற்புதங்கள் அங்கு இனி வெளிப்படும் என்றும், பல பக்தர்களுக்கு அவரின் தரிசனம் கிட்ட உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


குதம்பை சித்தரின் பிரவேசம் சேலம் மலைத்தொடர்களில் இனி அதிகமாக இருக்கும் என்றும், மலைகளில் உள்ள தெய்வீக தன்மைகளை மக்களுக்கு இவர் வழிமூலமே இனி தெரியவரும் என்றும், இது சத்திய யுகத்திற்கான வேலையாக மக்கள் கருத வேண்டும் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.



கன்னியாகுமரி, வேதாரண்யம், விசாகப்பட்டினம் போன்ற கடல் சார்ந்த ஊர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று 10-ம் தீர்க்கதரிசனத்தின் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.


இறைவன் இடம்பெறும் அந்த இறுதி சபையில் இறைவனின் அற்புதங்களை மக்கள் காணும்படி பல அதிசய சம்பவங்கள் துவங்கிட இருப்பதாகவும், அது துவங்கும் சமயத்தில் சென்னையில் உள்ள “மெரினா பீச்“ பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என்றும், அது ஒரு வரலாற்றை பதிய வைக்க இருப்பதாக சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய இறை சார்ந்த குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

மன்னர்கள் ஆண்ட இப்பூமியை இனி மன்னர்கள் போன்ற மக்கள் ஆள்வார்கள் என்றும், அவர்களை இறைவனே தேர்ந்தெடுத்து அரியணையில் அமர வைத்து ஆட்சி செய்யும் பொற்காலம் இப்பூமியில் விரைவில் வந்துவிடும் என்றும், இனி இப்பூமியில் இறைவனின் இறையாட்சி துவங்கிட இருப்பதாகவும், அதன் தூதுவராக ஒரு யோகா அமைப்பு தமிழகத்திலிருந்து செயல்படும் என்றும், அதற்கு அறிகுறியாக இனி தமிழகத்தில் மழை அதிகமாக பெய்யும் என்றும், இனி காவேரியின் வரலாறு தமிழகத்தில் மட்டுமே பேசும் அளவிற்கு அமைய உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


கடலோர மாவட்டங்களுக்கு பலத்த கனமழை எச்சரிக்கைகள் தரப்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், மரணத்தின் ஓலம் மிகுந்த உச்சத்தில் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் நமக்கு வரக்கூடிய பேராபத்துகளை சுட்டிக் காட்டுகின்றன.


வரக்கூடிய “மாசி“ மாதம் மிகுந்த மாற்றங்களை தமிழகத்தில் உருவாக்கும் என்றும், தமிழனின் பெருமைமிக்க ஆட்சியை இறைவன் இப்பூமியில் அமைக்கும் துவக்க காலமாக அக்காலம் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

இனி புண்ணிய ஷேத்ரங்கள் யாவும் இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என்றும், அதற்கான நிகழ்வுகள் இனி ஒவ்வொன்றாக துவங்கிட இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


புகழ்மிக்க ஒருவனின் வருகை இந்தியாவில் தற்போது நிகழ இருப்பதாகவும், அவனின் வருகையை மக்கள் எதிர்நோக்கும் இக்காலமே சத்திய யுகம் என்றும் அதனை காண நாமும் காத்திருப்போமாக.

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...