09/07/2018

இயற்கை வாழ்வியல்முறை - ஆண்மை அதிகரிக்க பண்டைய கால மன்னர்கள் சாப்பிட்ட நான்கு உணவுகள்..


நம் முன்னோர்களின் அறிவியல்...

இன்றைய கால கட்டத்தில் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு மூல காரணம் முப்பது வயது தாண்டுவதற்குள் இரத்த ஓட்டம் சீரின்மை, நீரிழிவு, உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படுவது தான்.. இதுவே விறைப்பு தன்மை கோளாறுகள் ஏற்படுத்துகின்றன.

நமது நாட்டின் உணவு பழக்கவழக்கத்திலேயே இது போன்ற நோய்களை குணப்படுத்த முடியும் என்று பழைய கால குறிப்புகள் கூறுகின்றன . அனால் இதற்க்கு தீர்வாக அனைவரும் ஆங்கில மருத்துவதையே தேடி செல்கின்றனர்..

நம்மை ஆண்டு வந்த மன்னர்கள் அந்த காலத்தில் இது போன்ற விஷயங்களுக்கு தீர்வாக எந்த எந்த உணவு பொருட்களை உட்கொண்டனர் என்பதை கீழே காண்போம்..

குங்குமப்பூ: குங்குமப்பூ கருவளம் அதிகரிக்க உதவும் சிறந்த உணவுப் பொருள் ஆகும். இது நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்து கருவளத்தை தூண்டுகிறது

எப்படி எடுத்துக் கொள்ளலாம்...

இரவு படுக்க செல்லும் முன் குங்குமப் பூவை ஒரு சிட்டகை அளவு எடுத்து, இதமான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

புளியங்கொட்டை:  முக்கியமாக புளியங்கொட்டை விந்தணு எண்ணிக்கை குறைபாடு மற்றும் விறைப்பு தன்மை குறைபாடுகளை போக்கும் திறனுள்ளது…. பல நன்மைகள் இதில் உள்ளது.

எப்படி எடுத்துக்கொள்ளலாம்...

பாலில் புளியங்கொட்டை பவுடரை கலந்து இரண்டு முறை ஒரு நாளுக்கு குடித்து வர வேண்டும்

அஸ்வகந்தா: நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் திறன் கொண்டது அஸ்வகந்தா… மேலும் இது வலுவின்மையை சரி செய்யும்.. விந்தணு எண்ணிக்கைகளை கூட்டும்…

எப்படி எடுத்துக் கொள்ளலாம்...

இதமான நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் அஸ்வகந்தாவைகலந்து குடித்து வர வேண்டும்

நெல்லிக்காய்: சிறுநீர் கோளாறுகள், குறைந்த விந்தணு எண்ணக்கை ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் மிக சிறந்த மருந்து..

எப்படி எடுத்துக் கொள்ளலாம்..

இரண்டு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.

முக்கியமான குறிப்பு :

இவை அனைத்துமே மூலிகை மற்றும் இயற்கை பொருட்கள் தான். ஆயினும், ஒருசில உடல் ஆரோக்கிய குறைபாடுகள் / நோய்கள் உள்ளவர்களுக்கு இது அலர்ஜியாக இருக்கலாம்.

இது ஒவ்வொரு தனி நபரின் ஆரோக்கியம் சார்ந்தும் வேறுபடும். எனவே, இதை பின்பற்றும் முன்னர் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.