20/07/2018

விழுப்புரத்திலிருந்து விக்கிரவாண்டி வரும் வழியில் இருக்கும் இந்த இடம் அரசாங்க பேருந்துகள் வந்து செல்லும் உணவகம்..


தரம் என்றால் என்ன என்று கேள்வி கேட்பவர்கள்.. நடுத்தர மக்களின் பணத்திற்கு சிறிதும் தரமில்லாத உணவு பொருட்கள், தேனீர், தண்ணிர் விற்கும் இவர்களை அரசாங்க அதிகாரிகள் தர பரிசோதனை செய்ய வேண்டும்..

கண்டக்டர் கிட்ட குடுக்கற சார்ட்ல ஹோட்டல் முத்திரை குத்தி குடுக்கரானுக... டிப்போ அதிகாரிகள் ஒரு வண்டிக்கு ஐம்பது ரூபாய் என்று வசூலிக்கிறார்களாம். டிரைவர் கண்டிப்பாக அந்த ஹோட்டல்ல வண்டிய நிறுத்தணுமாம். இல்லைனா சஸ்பெண்ட் செய்து விடுவார்களாம்.

டிரைவர் கண்டக்டர் இருவரும் அங்கே கையெழுத்து போட்டு விட்டு தான் சாப்பிடணுமாம். ஒரு சில டிரைவர்கள் அந்த இடத்தில் வண்டிய நிறுத்திய உடனே பாத்ரூம் போறவங்க போய்ட்டு வந்திருங்க என்று கூறுவார்கள்

அதன் அர்த்தம் அந்த இடம் ஒண்ணுக்கு போக மட்டுமே லாயக்கு என்பதற்காம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.