திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் ஒரு புகார் அளித்தார். அதில், கெங்கலமகாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளை கடத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், எப்படியாவது தனது மகளை மீட்டுத் தருமாறும் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அதன்படி கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்டவரின் வீட்டிற்கு போலீசார் நேரில் சென்றனர். அங்கு போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது பெண்ணை கடத்தியவருக்கு வயது 17 என்றும், பெண்ணிற்கு வயது 18 என்றும் தெரியவந்தது.
கடத்தப்பட்டவரின் வயதை அறிந்ததும் போலீசாருக்கு ஷாக்! பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் இரண்டு பேரும் கடந்த 31-ம் தேதியே கல்யாணம் செய்து கொண்டு குடும்பமும் நடத்தி வருவது தெரியவந்தது. இது அடுத்த ஷாக்!! இரண்டு பேருக்குமே இது திருமண வயது கிடையாது.
சட்டத்திற்கு புறம்பான முறையில் கல்யாணம் செய்து கொண்டதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிளஸ்-2 தானாம் உடனடியாக கடலாடி போலீசார், இரண்டு பேரையும் அழைத்து கொண்டு, நீதிபதி முன்பு நிறுத்தினார்கள். எதிரில் வந்து நின்றவர்களின் வயது, மற்றும் திருமணம் செய்த விவரத்தையும் கேட்டு நீதிபதியும் ஷாக் ஆனார்.
அந்த பெண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாராம். அந்த சிறுவன் இப்போதான் பிளஸ் 2-வாம்! நீதிபதி உத்தரவு பின்னர், "17 வயதான சிறுவனை, கல்லூரி மாணவி சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்து கொண்டதால் அவர் மீதும், அவருடன் பாலியல் குற்றம் புரிந்ததால் சிறுவன் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று கடலாடி போலீசாருக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.