நமது வாழ்கையின் வெற்றியை, சந்தோஷத்தை நமது மனம் தான் தீர்மானிகிறது என்று முந்தய பதிவில் பார்த்தோம்..
மனதிற்கு பிடித்த செயலை நாம் செய்வதினாலேயே நாம் வெற்றி அடைய முடியும்.
இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு தான் 3 iidots என்ற ஒரு படம் சில ஆண்டுகளுக்குமுன் வெளிவந்தது.
அந்தப் படத்தில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணி வெற்றியை துரத்திச் சென்றால் உங்களுக்கு விரக்திதான் மிஞ்சும்..
மாறாக உங்களின் விருப்பத்தில் முழு கவனம் செலுத்தி வேலை செய்தால் வெற்றியானது உங்களின் பின்னால் ஓடி வரும் என்பதே அந்த படத்தின் கருத்து ஆகும்.
உங்களின் விருப்பத்தை எவ்வாறு தேர்வு செய்வது ?
விரும்பிய பணியை செய்தால் தான் வெற்றி கிடைக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் நான் நம்முடைய மனம் விரும்பும் பணி, செயல் எது என்று எப்படி கண்டுபிடிப்பது என்று உங்களில் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம்.
எந்த செயலை நீங்கள் செய்யும் போது உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லையோ,
எந்த செயலை நீங்கள் செய்யும் போது நீங்கள் உங்களையே மறந்தும் வேலை செய்கிறீர்களோ,
எந்த செயலை நீங்கள் செய்யும் போது உங்களுக்கு நேரம் செல்வதே தெரிவதில்லையோ,
எந்த செயலை உங்களுக்கு கொடுத்தால் ஒரு நாளில் அதிகநேரம் சந்தோஷமான மனநிலையில் செய்வீர்களோ..
அதுவே உங்கள் மனம் விரும்பிய செயலாக இருக்கும் நண்பர்களே.
நீங்கள் இதனை நம்பவில்லை என்றால் வாழ்கையில் வெற்றியாளராக இருக்கும் சிலரின் வாழ்கையை படித்துப் பாருங்கள்...
சச்சின் டெண்டுல்கர் பல ஆண்டுகளாக தனது கிரிக்கெட் விளையாட்டை காதலித்து விளயாடியதாலும்,
ஏ.ஆர்.ரஹ்மான் பல மணிநேரமாக இசையில் மூழ்கி தன்னுடைய விருப்பமான துறையில் பணியாற்றியதாலும்..
அவர்களால் இப்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர்.
இப்பொழுது நாம் மனதின் விருப்பத்தை தெரிந்து கொண்டோம், வெற்றியாளர் ஆவதற்கு விருப்பம் மட்டும் போதுமா ?
மனதின் விருப்பத்துடன் பலர் பணி புரிந்தும் அனைவராலும் வெற்றியாளர் ஆகமுடிவதில்லையே ஏன் ?
சரியான இலக்குகளை நிர்ணயிக்காமல் பயணிப்பதலேயே பலராரும் வெற்றி பெற முடிவதில்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.