அரசுத்துறை நிறுவனங்கள் மீது வெறுப்பை கட்டமைத்து, அந்த நிறுவனங்கள் மீது மக்களிடம் நம்பிக்கையின்மையை உருவாக்கி மூடி விட்டு தனியாரிடம் அரசு நிறுவனங்கள் செய்து வந்த சேவைகளை ஒப்படைக்கும் சதி கடந்த இருபது ஆண்டுகாலமாக நடந்து வருகிறது.
தொலைத் தொடர்பில் ஆரம்பித்து இன்று பல்வேறு துறைகளில் இது வந்து நிற்கிறது. கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் இதில் முக்கியமானது. பணம் இருந்தால் மட்டுமே நல்ல கல்வியும் மருத்துவ வசதியும் கிடைக்கும் என்று தள்ளப்பட்டிருக்கிறோம்.
இந்த துறைகளில் உள்ளவர்கள் மீது குறையே இல்லையா என்றால் உள்ளது. ஆனால் குறைகளை நிவர்த்தி செய்யாமல் ஒட்டு மொத்தமாக மூடு விழா நடத்த எத்தனிக்கும் அதிகார வர்க்கத்தின் சதிக்கு ஆட்படுவது மிக ஆபத்தானது.
போராட்டத்தில் இருக்கும் ஆசிரியர் அரசு ஊழியர்கள் மேல் எடுக்கப்படும் நடவடிக்கையை ஆதரித்து கருத்து உருவாக்குவது சர்வாதிகாரதிற்கு வால் பிடிப்பதை போல அமையும்.
அரசு ஊழியர்களின் உண்மையான கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.