31/01/2019

உருவாக்குங்கள்...


நீங்கள் ஒரு உலகம் புகழும் கலைஞரா ஆகிறீர்களா? என்பது முக்கியமான விடயமல்ல. ஆனால் எதையாவது உருவாக்குங்கள் – ஒரு அழகிய பாடல், சிறிதளவு இசை, ஒரு நடனம், ஒரு சித்திரம், ஒரு தோட்டம்.

ரோஜாக்கள் பூக்கும் பொழுது, அத்தனை மலர்களுக்கிடையில் வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்று உங்களால் சொல்ல முடியாது.

ஒரு அழகான ஓவியம் – வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்று உங்களால் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த ஓவியம் முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இதற்கு முன் யாருமே செய்ததில்லை, யாருமே இதை மீண்டும் செய்யப் போவதில்லை. அதை செய்ய உங்களால் மட்டுமே முடியும்.

நீங்கள் என்ன செய்தாலும் அதில் உங்கள் தனித்தன்மை வெளிப்படுத்துங்கள்.

உங்களை பற்றி உயிர் வாழ்தல் பெருமை அடையட்டும். வாழ்க்கை சலிப்புட்டுவதாக உணராது; அது ஒரு நறுமணம் ஆகும்.
உங்கள் வாழ்க்கையை வெறுமனே சாதாரணமாக வாழுங்கள். ஒவ்வொரு அனுபவத்திற்குப் பின்னாலும் ஒரு கேள்விக்குறியைப் போடாதீர்கள். மனிதர்கள் உங்களைப் பைத்தியம் என்று நினைக்கலாம். ஆனால் நீங்கள் பைத்தியம் என்றால் இந்த உயிர் வாழ்தல் மொத்தமுமே பைத்தியமாக இருக்கவேண்டும். என்ன செய்வது? இது நமது சக்திக்கு அப்பாற்பட்டது.

தினமும் காலையில் ஏன் சூரியன் உதிக்கிறது? ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. ஒரே ஒரு நாள் கூட அது மேற்கிலிருந்து உதிப்பது இல்லை -- ஒரு மாற்றத்திற்காகவேனும் " நான் கிழக்கிலிருந்து உதிப்பதில் சலிப்படைந்து விட்டேன்" என்பதுமில்லை. விஷயங்கள் வெகு சாதாரணமாக எளிதாகச் சென்றுகொண்டிருக்கின்றன. மனிதன் மட்டுமே தொந்தரவில் இருக்கிறான்.

நீங்கள்கூட ஒரு ரோஜாப் புதரைப் போல வாழத் தொடங்கும்போது, சூரியனைப் போல உதித்துக் கொண்டு, ஒரு வெண் மேகத்தைப்போல மிதந்து கொண்டு வாழும்போது, அந்த மர்மமான, அற்புதமான, உயிர்வாழ்தலின் உண்மையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள்.

வாழ்க்கை ஒரு மகிழ்ச்சி வதனமும் மட்டுமல்ல, ஒரு உருவாக்கும் நபருக்கு, ஒரு தியானம் செய்யும் நபருக்கு, மரணம் கூட உயர்வானதாக மாற்றமடையும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.