19/01/2019

அரச மரத்தின் வேரிலிருந்து வெளிப்பட்ட அதிசய சிவலிங்கம்...


பல்லாண்டு காலமாக பரந்து விரிந்திருக்கும் அரச மரத்தின் வேர்களுக்கு இடையே, பழைமைவாய்ந்த சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டிருக்கிறது. கிராமத்தைக் காக்க சிவபெருமான் திருவுளம்கொண்டு, காட்சி தந்திருப்பதாகக் கருதி, பொதுமக்கள்  பக்திப்  பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, இளங்கானூர் கிராமத்தில் அரசமரத்தின் வேர்களுக்கிடையே சிவலிங்கம் வெளிப்பட்டுள்ளது. 3 அடி உயரமுள்ள இந்த சிவலிங்கம் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இந்த லிங்கம் முழுவதும் அரசமர வேரின் அடியில் உள்ளது. இந்த மரத்தைச் சுற்றி கோயில் இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிந்த, கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமி, இக்கிராமத்துக்கு வந்து, சிவலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார். அப்போது 'விரைவில் வேர்களை அகற்றி, சிவலிங்கத்தை வெளியில் எடுத்து, இங்கு மிகப்பெரிய சிவன் கோயில் கட்டும் திருப்பணி துவக்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், இந்த இடத்தில் கன்னியம்மன் கோயில் இருந்ததாகவும், அருகிலிருந்த  ஆலமரம் வளர, வளர கோயில் இடிபாடுகளில் சிக்கி சிதிலமடைந்ததாகவும், அதிலிருந்து 7 செங்கல்லை மட்டும் எடுத்து கன்னியம்மனாக கருதி எங்கள் முன்னோர் வழிபட்டு வந்துள்ளனர். சில நாள்களுக்கு முன் எதேச்சையாக சிவலிங்கம் கண்ணில் பட, நாளடைவில் அதன் மேல் தோற்றம் தெரிய ஆரம்பித்தது. எப்போதோ மறைந்த சிவபெருமான், எங்க கிராமத்தைக் காக்க, தற்போது அருள்புரிய வந்திருப்பதாக கருதுகிறோம். இதைக்  கேள்விப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தினம்தோறும் கூட்டம் கூட்டமாக வந்து சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்கிறார்கள். எங்கள் காலத்தில் சிவபெருமான் காட்சியளித்து இருப்பது பெரும் பாக்கியம். விரைவில் சிவாலயம் கட்டும் பணியில் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.