07/01/2019

உடலுக்கு தேவை நடை பயிற்சி...


நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடைபயிற்சி தான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது நடைபயிற்சி போங்க என்பதாக தான் இருக்கும்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்க வேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ நடக்க ஆரம்பித்து நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம்.

இது ஆண்களுக்கு 92 முதல் 102 பாத அடியாகவும் பெண்களுக்கு 91 முதல் 115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால் தான் ஆண்களுக்கு இணையாக நடக்க முடியும். நடைப்பயிற்சியின் போது வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.

மூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.

சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி காலுறைகள் (shocks), செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.