03/02/2019

பாஜக மோடி யால் ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை...


டிமோனிடைசேஷன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் GST நடவடிக்கையால் இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் 2017-18 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக  அதிகரித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் நகர்ப்புறங்களின் 7.8 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையுள்ள ஓராண்டில் வேலையில்லாதோர் விகிதம் 6 .1 சதவீதமாகி உள்ளது.

இது 1972-1973ஆம் ஆண்டுக்குப் பின் அதிக அளவாகக் கருதப்படுகிறது. நகர்ப்புறத்தில் வேலையில்லாதோர் விகிதம் ஏழு புள்ளி எட்டு விழுக்காடாகவும், ஊர்ப்புறத்தில் 5.3 சதவீதமாகவும் உள்ளது

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் எனப்படும் அமைப்பு, கடந்த ஆண்டில் ஒரு கோடியே பத்து இலட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 6.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் இது தேசிய பேரழிவு. இது கேரள மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் இரட்டிப்பு தொகை ஆகும் அதாவது இந்தியாவில் இரண்டு கேரள மாநிலம் வேலை இல்லாமல் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

மோடி அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2017-18 ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் ஊடகங்கள் மூலம் கசிந்துள்ளது. கடந்த நாலே முக்கால் ஆண்டுகால மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத ‘சாதனை’களை முறியடிக்கும் வகையில், இந்த புள்ளிவிவரம் இருக்கிறது. இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் 2017-18 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

தங்களது பதவியை ராஜினாமா செய்த (இடமிருந்து) பி.சி. மோகனன், ஜே.வி. மீனாட்சி.
தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த பி. சி. மோகனன், அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஜே. மீனாட்சி ஆகியோர், வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரத்தை தொடர்புடைய அமைச்சகம் வெளியிட மறுப்பதாகக் கூறி, தங்களுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாக வேண்டிய இந்த ஆய்வறிக்கை தாங்கள் இருவரும் ஆராய்ந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் 65 மில்லியன் இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் என்கிறது ஆய்வறிக்கை.

1972-73 காலக்கட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 5.18 சதவீதமாக இருந்தது. அப்போது உலக எண்ணெய் பற்றாக்குறை பிரச்சினை காரணமாகவும் பாகிஸ்தானுடனான போர் காரணமாகவும் வேலை வாய்ப்பின்மை இந்த ஆண்டில் அதிகமாக இருந்தது.

ஆனால், போர்ச்சூழலோ உலகளாவிய பிரச்சினையோ இல்லாத நிலையில் மோடி உருவாக்கிய பணமதிப்பு நீக்கமும் ஜி.எஸ்.டி.யும் 1973-ஆண்டைவிட மிக மோசமான வேலைவாய்ப்பின்மை விகிதத்தை அதிகரித்திருக்கின்றன. 2017-18 ஆண்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.1 சதவீதம்!

நகர்ப்புறங்களின் இந்த விகிதம் இன்னும் அதிகரித்து 7.8 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது. கிராமப்புற பெண்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 13.6 சதவீதமாக உள்ளதையும் இந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

கடந்த மாதம் அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட ஆய்வில் 2016-ஆம் ஆண்டிலிருந்து 3.5 மில்லியன் வேலையிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்தது. இதற்கு பணமதிப்பு நீக்கமும் ஜி.எஸ்.டி.யும் முதன்மையான காரணங்கள் என குறிப்பிட்டிருந்தது அந்த ஆய்வு.

இந்நிலையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்பு நடத்திய ஆய்வறிக்கையில் இந்த நிலைமை மிக மோசமான நிலையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. அரசு தரப்பிலிருந்து வெளியே கசிந்த ஆய்வறிக்கை தவறு என்று தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம் உறுதிபடுத்தப்படவும் இல்லை என ஊடகங்கள் சொல்கின்றன.

“இந்த அறிக்கையை நாங்கள் வெளியிடவில்லை. அதுகுறித்து நான் கருத்து சொல்ல முடியாது” என்கிறார் மத்திய அரசின் தலைமை புள்ளிவிவரவியலாளர் பிரவீன் ஸ்ரீவத்சவா. ஆனால், இந்த ஆய்வறிக்கை இறுதியானதல்ல, மீண்டுமொருமுறை அறிக்கையை சரிபார்த்து விட்டு வெளியிடுவோம் என்கிறார் அவர்.

மோடி ஆதரவு ஊடகங்கள் தவிர்த்த கருத்து கணிப்புகள் மோடி அரசின் செல்வாக்கு குறைவதைக் காட்டும் நிலையில், இந்த புள்ளி விவரங்கள் வெளிவந்தால், ஓட்டுக்கேட்க மக்கள் முன் போய் நிற்க முடியாது என மோடி கும்பல் நினைக்கிறது. இதன் விளைவாகவே, அறிக்கையை வெளியிடாமல் தாமதம் செய்கிறது. விவகாரம் வெளிவந்துவிட்ட நிலையில், பட்டி டிங்கரிங் செய்த அறிக்கையை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

உள்நாட்டு உற்பத்தியின் பங்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தியான 17 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த கடந்த நான்கு ஆண்டுகளில் மோடி அரசு முயற்சிக்கவில்லை என பொருளாதார விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுதோறும் 2 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என தனது 2014-ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கினார் மோடி. ஆனால், இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதத்துக்கு கூடுதலாக விரிவடையும்போது, அதற்கேற்றபடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இந்த சீரற்ற வளர்ச்சியை பொருளாதார வெற்றி என அரசு சொல்லிக் கொள்வது வெற்று கூச்சல் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

‘’2012-ஆம் ஆண்டிலிருந்தே வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில், அதற்கு தீர்வு தேட முயலாமல் ஆய்வறிக்கையை முடக்குவது சரியான தீர்வல்ல’’ என்கிறார் முன்னாள் தலைமை புள்ளிவிவரவியலாளர் பிரொனாப் சென். “அரசு மீது சந்தேகத்தைத்தான் இது வலுப்படுத்தும்” என்கிறார் அவர்.

கடந்த மாதம் இந்திய பொருளாதார கண்காணிப்பகம், கடந்த ஆண்டு மட்டும் நாட்டில் 11 மில்லியன் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்ததையும் மோடி அரசின் மோசடிகளை தோலுரிக்கின்றன.

மதவெறி மனநிலையை வளர்த்து வன்முறையைத் தூண்டுவது மட்டும் நாட்டை ஆள போதுமான திறமை என பாஜக கும்பல் நினைக்கிறது. மற்றொரு புறம் முதலாளிகளுக்கு கொட்டிக் கொடுத்து நாட்டு மக்களுக்கு பட்டை நாமம் போடுகிறது. கார்ப்பரேட் மற்றும் பார்ப்பனியத்திற்கு அடியாள் வேலை பார்க்கும் காவி கும்பல் நீடித்தால் வறுமையும் ஏழ்மையும் தாண்டவமாடும் என்பதை மேற்கண்ட அறிக்கைகள் சொல்கின்றன.

உடனே இதற்கு மாற்றாக காங்கிரசை நினைக்காதீர்கள். தேவை இங்கு மாற்று கட்சி அல்ல மாற்று வழிமுறைகள் மாற்று சித்தாந்தங்கள்.

தமிழர் ஆய்வுக் கூடம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.