21/02/2019

பல சமயங்களில் கன்று போட்ட உடன் மாடு நன்றாக இருக்கும்...


கன்று போட்டு நான்கு ஐந்து நாட்கள் கழித்து மாடு படுத்துவிட்டால் எழுந்து நிற்க முடியாமல் படுத்தே இருக்கும்.

இடுப்பு பகுதி உணர்ச்சி குறைவாக இருக்கும். பால் காய்ச்சல் எனக்கருதி கால்சியம் குளுகோஸ் மருந்துகள் போட்டாலும் மாடு எழுந்து நிறகாது. ஆனால் தீவனம் தின்னும்.

இதற்கு காரணம் மாடு கன்று ஈனும் போது வழக்கத்தை விட இடுப்பு எலும்பு (hip joint) விரிவடைந்து விடுவதே.

கன்றின் எடை 25 கிலோவிற்கு மேல் இருக்கும் மாடுகளில் இந்த குறைபாடு இருக்கும்.

மேலும் சத்து குறைபாடு; இடுப்பு பகுதி நரம்பு மற்றும் இரத்தக்குழாய் கசங்குதல் மற்றும் சவ்வு பிரச்சினை அனைத்தும் இருக்கும். 

இதற்கு நான் படத்தில் காட்டியபடி மாட்டை தூக்கி நிறுத்தி கட்டி அப்படியே 3__5 நாட்களுக்கு விடவேண்டும்.

நல்ல சத்தான ராகி கஞ்சி, தட்டு , இவற்றுடன் கால்சியம் வைட்டமின் திரவ டானிக் தரலாம்.

கூடவே நாயுருவி; அகத்தி மற்றும் முருங்கை இலை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். 

மேல்பூச்சாக நான் கூறும் சிகிச்சையை செய்யுங்கள்... மாடு கண்டிப்பாக கசாப்புக்கு போகாது...

பிரண்டை இரண்டு கிலோ ; கருவேலன் மரப்பட்டை அரை கிலோ எடுத்து நன்றாக உரலில் கூழ்பதத்தில் இடித்து எடுத்துக் கொண்டு இத்துடன் அரைகிலோ ராகிமாவு ; சலித்த புற்று மண் அல்லது களிமண் அரைகிலோ இவற்றை ஐந்து லிட்டர் தண்ணீரில் கலந்து சட்டியில் வைத்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு கிண்டி கொதி நிலை வந்ததும் இறக்கி வைத்து இளம் சூட்டில் ஐந்து கோழி முட்டை வெள்ளை கருவை  ஊற்றி கலந்து இந்த மருந்து கலவையை ஆறிய பின் எடுத்து மாட்டின் இடுப்பு பகுதி கால் சப்பை மற்றும் முன் கால் சப்பைகளில் மொத்தமாக பூச வேண்டும்.

இதுபோல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை போட வேண்டும். எனது பத்தாண்டு அனுபவ ஆராய்ச்சி மருந்து இது.

கிடையாக கிடந்த மாடு கூட எழுந்து நடக்கும்.

கூட முருங்கை இலை அகத்தி உள்ளே கொடுங்கள். கண்டிப்பாக மாடு நடக்கும். இழந்த பால் திரும்பும்.

முடிந்தவரை ஷேர் செய்யுங்கள். என்னுடைய இந்த சிறிய முயற்சிக்கு படித்த விவசாயம் செய்வோர் ஆதரவு தாருங்கள். கால்நடை சிகிச்சையில் புது புரட்சி செய்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.