தன்னம்பிக்கையும் - வெற்றியும்- ஆரோக்கியமும்...
உலகில் வாழும் எந்தவொரு சிறு உயிரினமும் தான் வாழும் சூழலில் போராடி தான் உயிர் வாழ வேண்டும். போராடினால் தான் உயிர் வாழ முடியும். இது இயற்கை விதி. உலக பொது நியதி.
இதில் தன்னம்பிக்கை ஒன்றுதான் நம்மை வாழவைக்கும். உறவு பணம் பலம் எல்லாம் இரண்டாம் பட்சமே.
உன்னுள் இருக்கும் உன்னை நம்பினால் உன்னாலும் வெற்றிபெற முடியும்.
நான் ஜெயிப்பேன் என்ற சொல்லும். என்னால் முடியாது என்ற சொல்லும் உன்னிடம் இருந்து தான் வருகிறது . உன் மனம் உறுதி பட்டால் உடல் தன்னால் ஒத்துழைக்கப்போகிறது பிறகு வெற்றி நிச்சயம்.
நீ எதை கண்டும் பயந்து போகாதே. உன்னை சோர்வடைய எப்பொழுதும் அனுமதிக்காதே.
உனக்குள் ஒரு லட்சியத்தை வை அதற்க்காக பாடுபடு. பல தடைகள் வரத்தான் செய்யும் தடைகளை உடைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை தடைகளை எளிதாக தாண்டிச்செல். முன்னேறு முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு.
ஒரு வெற்றிகிடைத்தால் அடுத்த வெற்றிக்கு உடனே ஆயுத்தமாகிவிடு.
யாராவது தனக்கு உதவுவார்களா என எதிர்பார்க்காதே. நீச்சல் தெறியாதவன் தண்ணீரில் விழுந்தால் தன்னை காப்பாற்றிக் கொள்ள என்ன முயற்ச்சி செய்வானோ அதை நீ செய்.
மற்றவர் உண்னை வெற்றிக்கொள்ள பார்க்கிறார்கள் நீ அவர்களை முந்திச்செல்.
உன் தன்னம்பிக்கையை விட சிறந்த தோழன் யாருமே இல்லை. தன்னம்பிக்கை இருந்தால் தான் இறைசக்தியும் வேலைசெய்யும் என்பதை நினைத்து பார். தன்னம்பிக்கை சக்தி எவ்வளவு வலிமையானது என்று உனக்கே புரியும்.
மனதில் கொஞ்சம் தன்னம்பிக்கையை வை அது ஆயிரமாயிரம் தைரியத்தை உன்னுள் சேர்க்கும். முயன்று பார் தெறியும். முடங்கிவிடாதே.
உன் இறப்பு இப்போதைக்கு இல்லை அதுவரையில் வாழத்தான் போகிறாய் தன்னம்பிக்கையின் துனண கொண்டு வெற்றியை பதிவிட்டுச் செல்லேன்.
வெறுமனே சாவது ஒரு வாழ்க்கையா? வாழ்க்கையை தோல்வியோடு முடிப்பதை விட கடைசி வரை வெற்றிக்காக போராடி மடிவதே மேல்.
மடிவது குற்றமல்ல. அது போர்க்களமாக இருக்கட்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.