11/03/2019

திமுக - பாஜக வின் ஜாதி வெறி அரசியல்...


நட்சத்திர அந்தஸ்து பெறும் தூத்துக்குடி தொகுதி : வளர்ச்சிப்பாதை நோக்கி முன்னேறுமா?

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு, திமுக சார்பில் மாநில மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியும், அதிமுக சார்பில் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கிற பாஜக வேட்பாளர், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜனும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி கருணாநிதி விருப்ப மனு தாக்கல் செய்திருப்பதும், பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜனோ, தூத்துக்குடி தொகுதி எனக்கு பரிச்சியமானவை என்றும், நான் போட்டியிடவில்லை என்று கூறாமல், போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறியிருப்பதன் மூலம் இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக இருவரின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இருந்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தனியாக பிரிக்கப்பட்டு முதன் முறையாக திமுகவும், அடுத்ததாக அதிமுக இரண்டாவதாகவும் வெற்றிப்பெற்றுள்ளன.

ஆகவே தற்போதைய தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக ஒரு தடவையும், அதிமுக ஒரு தடவையும் வென்று இரு கட்சிகளும் இத்தொகுதியில் சம பலத்தில் இருப்பதை காட்டுகிறது. இதில் இரு கட்சிகள் சார்பாக வென்ற இரண்டு வேட்பாளர்கள் மக்களிடையே நேரடியாகவும், அதிக அளவிலும் பரிட்சயம் இல்லாதவர்கள்.

இவர்களின் வெற்றி என்பது கட்சி மற்றும் சின்னத்தை பொறுத்து  அமைந்ததே தவிர வேட்பாளரை பொறுத்து அல்ல என்பது அரசியல் நோக்கு வல்லுநர்களால் ஆணித்தரமாக சொல்லக்கூடிய பதில் ஆகும்.

மண்ணில் மைந்தர்களை பாராளுமன்ற உறுப்பினராக கொண்ட தூத்துக்குடி தொகுதிக்கு இதுவரை ஒன்றுமே பெரிய அளவில் கிட்டாத நிலையில், சென்னை வாசிகளான கனிமொழியும், தமிழிசையும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டால் ஸ்டார் தொகுதி என்ற பெருமையை தூத்துக்குடி பெருமே தவிர, தொகுதி வளர்ச்சி என்பது வழக்கமான நடைமுறையில் தான் இருக்கும் என்பது தொகுதி வாசிகளின் கணிப்பாக உள்ளது.

ஆறு சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு மண்ணின் மைந்தர் வேட்பாளராக ஒருவர் கூட கிடைக்க வில்லையா என மக்கள் மத்தியல் கேள்வி எழும்பியுள்ளது...

குறிப்பு : தூத்துக்குடியில் நாடார் சாதி மக்கள் அதிகம் என்பதால்... இங்கு இந்த இரண்டு நாடார் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.