நாம் பல பிறவிகளை கடந்து இந்த சென்மத்தை அடைந்துள்ளோம்.
இது வரை நாம் எல்லா பிறவிகளிலும் சேகரித்த கர்ம பதிவுகள் நம் ஆன்மாவில் பதிந்துள்ளது.
அதில் இருந்து நம் ஆன்மாவை பிரித்தால் ஒழிய பிறவி என்பது தொடர்கதை தான்.
அந்த கர்மாவின் அதிர்வுகள் ஆக்ஞாவில் அதிர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அப்படி இருக்க அந்த அதிர்வுகளை ஒருநிலைக்கு கொண்டுவர அபரிமிதமான சக்தி தேவைப்படுகிறது.
அந்த சக்தி தான் குண்டலினி,
அதை கருத்தினால் இருத்தி கபாலம் ஏற்ற வல்லோர்க்கு ஊழ்வினை செயல்படுவதும் இல்லை, உறுத்துவந்து ஊட்டுவதும் இல்லை.
மூளை என்கிற மீடியம் மனம் என்கிற பிரபஞ்ச பதிவுகளை தொடர்பு கொள்ளாமல் இருப்பதே சமாதி நிலை.
மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளதால் அது நமக்கு மட்டும் சொந்தமானது இல்லை.
எனவே தான் குண்டலினியை எழுப்ப வேண்டும்.
ஏன் முக்திக்காக அலைய வேண்டும்?
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது.
இந்த அரிய வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்றால் அலைவதில் தவறில்லை.
போன சென்மமும் தெரியாது, அடுத்த சென்மமும் தெரியாது, கடந்த சென்மத்தில் எவனோ எங்கோ செய்த கர்மாவை நான் அனுபவிக்கும் போது, அடுத்த சென்மத்தில் எவனோ எங்கோ பிறப்பதற்கு நான் ஏன் சுகபோகங்களை தவிர்க்க வேண்டும்?
இந்த ஐம்புலன்களின் மாயையில் இருக்கும் வரைதான் எதுவும் தெரிவதில்லை.
உண்மையில் வாழ்க்கை என்பது மிகக்குறுகிய காலமே.
ஆன்ம நிலையில்தான் நாம் நெடுங்காலம் அலைகிறோம்.
சில ஆன்மாக்கள் யுகங்கள் கூட இருக்ககூடியது.
எனவே ஓடம்(உடல்) உள்ள போதே உறுதிபண்ணி கொள்ளக் கூடியது அவசியமாகிறது.
எவனோ எங்கோ என்பதைவிட ஆன்மாவாகிய நாம் என்பதே நிதர்சனம்.
பரப்பிரம்மத்தில் ஐயிக்கமாகி சும்மா இருப்பதைவிட, நான் ஏன் பிறவிகள் எடுத்து வாழக்கூடாது?
நாம் இங்கு மிகப்பெரிய இன்பமாக கருதுவதைவிட பரப்பிரமத்தில் ஐயிக்கியமாவது பலகோடி மடங்கு பேரானந்தம் எனும் போது முக்திதானே சிறந்தது.
நாளை கிடைக்கப் போகும் பலாக்காயைவிட, கையில் இருக்கும் கலாக்காய் சிறந்தது இல்லையா?
இன்று கையில் இருக்கும் கலாக்காய் விஷமாகக்கூட மாறலாம். ஆனால் பலாக்காயை புசித்தவனுக்குத் தானே தெரியும் அதன் அருமை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.