22/04/2019

சுற்றுப்புற சூழல் சேதாரம் - பாஜக நரேந்திர மோடியின் ஆட்சியின் சேதங்களில் உச்சபட்ச சேதம்...


உலக சுற்றுப்புறசூழல் சேதாரத்தில் 5 வருடங்களுக்கு முன் 155வது இடத்தில இருந்த இந்தியா இப்போது 4-ம் இடத்தில் என்பது அப்பட்டமாக மறைக்கபட்ட தகவல்.

வெறித்தனமாக முதலாளித்துவ விஸ்தரிப்புக்காக மோடி அரசு ஏற்படுத்திய சுற்றுப்புற சேதாரங்கள்.

ஜூன் 2014: ஆட்சிக்கு வந்தவுடன் “ஆபத்தான அளவு மாசுபட்டதாக” அறிவிக்கப்பட்ட 8 இடங்களில் தொழிற்சாலை நிறுவும் தடையை நீக்கியது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 10 கிலோமீட்டருக்குள் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் இருப்பதாய் தடுக்கும் சட்டத்தை தளர்த்தி 5  கிலோமீட்டர் ஆக்கியது. தார் உற்பத்தி, மணல் அள்ளுதல் மற்றும் மரத்தில் இருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

ஆகஸ்ட் 2014: வனவிலங்கு பாதுகாப்பு வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 3ஆக குறைக்கப்பட்டு, வனவிலங்கு அறைச்சையாளர்களுக்கு பதில் அரசு பணியாளர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த மாற்றியமைக்கப்பட்ட வாரியமும் கண்மூடித்தனமாக தொழிற்சாலை ஒப்புதல்களை வழங்கியது. முந்தைய ஆட்சியில் 80% ஆக இருந்த ஒப்புதல் எண்ணிக்கை 99.82% ஆக உயர்ந்தது

டிசம்பர் 2017: இந்தியாவில் உள்ள 400  அனல்மின்நிலையங்களுக்கும்  2015ல்  விதிக்கப்பட்ட காற்றில் பரவ விடக்கூடிய மாசு கட்டுப்பாடு விதிகளை தளர்த்தி மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்தது.

மேற்கண்ட நடவடிக்கைகளின் பலனாக 2018 கணக்கீட்டின்படி உலகில் அதிக மாசுபடத்துபட்ட 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் இருந்தது.

ஜூலை 2017: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நடுநிலை, தலைமை மற்றும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மோடி அரசு எடுத்த முயற்சிகள் உச்சநீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக பெரும் முதலாளிகளுக்காக சட்டங்கள் வளைக்கப்பட்டு மாற்றியமைத்தது மோடி அரசு.

கோவா மாநிலத்தில் நிலத்தரகர்கள் மற்றும் முதலாளிகளுக்கு சாதகமாக  இருக்கும் வகையில் தென்னை மரங்களை "புற்கள்" என்ற வகையின் கீழ் கொண்டுவரப்பட்டது (அதை வெட்டி வீழ்த்த அனுமதி தேவைப்படாது)  இந்த முட்டாள்தனமான சட்டத்தை உச்சநீதி மன்றம் நிறுத்திவைத்து.

2018ல் கடற்க்கரை சட்டங்கள் சரகம் (கோஸ்டல் ரெகுலேஷன் Zone)  மூலமாக நெகிழி திடகழ்வுகள் மேலாண்மை சட்டங்கள் நெகிழி  தொழிற்சாலைகளுக்கு சாதகமாக  மாற்றப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் ஆமைகள் சரணாலயத்தை பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பட்டியலிலிருந்து நீக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த அனுமதி அளிக்கப்பட்டால் உலகில் மனிதனால் அழிக்கப்பட்ட முதல் பாதுகாக்கப்பட்ட காடு இது தான்.

உலகில் மிக அரிதான கரியல் வகை முதலைகளை அழிக்கும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது கென்-பத்வா நதிநீர் இணைப்பு திட்டம். இது மத்யபிரதேசத்தில் உள்ள 4000 hectare பண்ணா புலிகள் சரணாலயம் முற்றிலுமாக அழித்துவிடும்

புல்லட் ரயில் திட்டத்திற்காக மஹாராஷ்டிராவில் மாஞ்சோலை  காடுகளில் உள்ள 53000 மாமரங்கள் அழிக்கப்பட இருக்கிறது.

உத்தரகாண்டில் ஒரு இந்து மத ஆலயத்துக்காக 25000 மரங்கள் வெட்டப்பட்டது ஏற்கனவே சூழலியல் பாதிப்புக்குட்பட்ட அந்த மாநிலத்தை மேலும் ஆபத்தில் தள்ளியுள்ளது   

இவை அனைத்தும் வணிகம் செய்ய வசதியான நாடு என்ற பெயரை இந்தியா பெற மேற்கொள்ளப்படும் சுற்றுப்புற சூழல் படுகொலைகள்...

https://theprint.in/opinion/environment-is-the-most-under-reported-failure-of-narendra-modi-government/223670/

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.