10/07/2020

1968களில் திமுக கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்...


இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யார் அந்த கருணாநிதி.?

அப்போது முதன் முறையாக முதல்வர் பதவியில் கருணாநிதி அமர்ந்த நேரம்... பல தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த நேரம் அது.

அதே காலகட்டத்தில் தான் ஜவகரிஸ்ட் என்ற பத்திரிக்கையும் வெளி வந்துக் கொண்டிருந்தது. அதன் ஆசிரியர் வேறு யாருமல்ல.. கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி. சுபிரமணியம் என்பவர் தான்.

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், (ஜனவரி5, 1968) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.

அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப் பட வைத்து விட்டது. முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது.

அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் கொண்டிருந்தவர் அல்லவா?

ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை என்று கூறி பரபரக்க வைத்தார்.

இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தி அல்லவா? விட்டுவிடக்கூடாது… என்று நீதிமன்றத்துக்கும் போனார்…

பெண் குழந்தை, மகள் என்று யாருமே எனக்கு தெரியாது. கனிமொழி என்ற பெயரில் பிறந்திருக்கும் குழந்தை எனக்கு பிறந்ததல்ல என்றார்..

பிறகு நடந்தது என்ன என்பது அன்றைய மூத்த தி.மு.கவினருக்கே தெரியும். செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக 6 மாத சிறை தண்டனைக்கு உள்ளானார் பத்திரிகை ஆசிரியர்..

அதுமட்டுமா? அந்த பத்திரிகையையே, இழுத்து மூட வைத்து விட்டனர்.. பின்னர் விடுதலையான பத்திரிகையாளர் என்ன ஆனார் என்றே தெரியாது... அவரது குடும்பத்தினர் பற்றிய எந்த செய்தியும் கூட கிடைக்கவில்லை...

அதே போலத் தான்....

கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிய மறுநாளில், அண்ணாமலை பல்கலை கழக கல்லூரி மாணவன் ஒருவன் அனாதை பிணமாக ரோட்டில் கிடந்தான்..
முந்தையநாள் கல்லூரி பட்டமளிக்கும் விழாவின் போது கருணாநிதிக்கு டாக்டர் பட்டமா? என்ற கேள்வியை கேட்டான் அந்த பல்கலை கழக கல்லூரி மாணவன்... விசாரணையின் போது அவனது பெற்றோரே, இவன் எங்கள் மகனல்ல என்று சொன்னார்கள்...

வழக்கும் மூடப்பட்டது...

ஒருவேளை அவனை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி பல்கலைகழகம் வரை படிக்க வைத்தவர்கள், எங்கள் மகன் தான் இவன் என்று சொல்லியிருந்தால், அந்த குடும்பம் முழுவதுமே அழிக்கப் பட்டிருக்கலாம்...

ஆனால் இப்போதோ... தன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன கனிமொழிக்காக சமீப காலம் முன்புவரை அழுது துடித்தார். ஒரு பூவை வைத்தாலும்கூட வாடிவிடும் அத்தகைய கொடுமையான அனலில் என் மகள் வாடுகிறாள் என கண்ணீர் வடித்தார்.

திகார் ஜெயிலில் இருந்த தன் மகளை ஜாமீனில் மீட்க, குடும்பத்துடன் சோனியா காந்தி வீட்டு வாசலில் போய் நின்றார்.

அன்று கனிமொழி கருணாநிதியின் மகள்தான் என சொன்ன பத்திரிக்கையாளருக்கு ஆறு மாத ஜெயில் தண்டனை…

திராவிடம், ஒழுக்கம், பத்திரிகை சுதந்திரம், சமதர்மம், மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசும் கருணாநிதி...

அவரின் உ.பி.களும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.