14/07/2020

இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் இறுதி பகுதி...


இப்படி மாற்றப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிக்கை தயாரிக்கும் பொறுப்பும் அதற்கான பொருளுதவியும் மார்க்சுக்கு அளிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த வேலையில் மார்க்சுக்கு உதவியாக நியமிக்கப்பட்டவர் அடிமை வியாபாரம் செய்து பெரும் புள்ளியான Jean Lafitte-Laflinne.

இந்த கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் செய்ததெல்லாம் நவீன இலுமினாட்டி குழுவைத் தோற்றுவித்த Adam Weishaupt மற்றும் Clinton Roosevelt ஆகியோருடைய புதிய உலக அதிகாரத்திற்கான திட்டத்தை பாட்டாளி வர்க போராட்டம் என்கிற போர்வையில் விரிவுப்படுத்தியது தான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த வகையில் இலுமினாட்டியின் கொள்கையான புதிய உலக அதிகாரத்தை அடிப்படையாக கொண்ட சோசலிசக் கொள்கையை வளர்த்தெடுத்த Francois Noel Babeuf (1760-1797) - யின் கொள்கைகளையும் தன்னுடைய அறிக்கையில் மார்க்ஸ் பயன்படுத்திக் கொண்டார்.

இதுவே கம்யூனிசமும் சோசலிசமும் இலுமினாட்டிகளின் மறைமுக குறியீடுகளாகப் மாற்றப்பட்ட விதம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கு அடுத்து வருவது மார்க்ஸ் குறித்த தனிப்பட்ட விவரிப்புகள்.

இவைகளை நிச்சயமாக எந்த ஒரு கம்யூனிஸ்ட் தோழரும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

அதிலும் தமிழர்களைப் போன்ற தலைமை பிம்ப வழிபாடு கொண்ட தோழர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்..

இருந்தாலும் மாற்று கருத்தையும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே அவருடைய இரகசிய மறுபக்கம் என்று குற்றம் சாட்டப்படும் விசயத்தைப் பார்க்கப் போகிறோம்.

இனி நீங்கள் படிக்கப்போவது உங்களுக்கு சிரிப்பைக் கூட வரவழைக்கலாம்..

மார்க்சின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படித்த எனக்கும் முதலில் அப்படித்தான் இருந்தது.

மார்க்சு குறித்த அனைத்து வாழ்க்கை வரலாற்று புத்தகங்களும் அடிப்படையாக சொல்லும் விசயம் அவர் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தார் என்பதும் அவருடைய குடும்ப பொருளாதார தேவைகளை அவருடைய நெருங்கிய நண்பர் ஏங்கல்சே கவனித்துக் கொண்டார் என்பதும்.

ஆனால் இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள் அது திட்டமிட்டே கட்டமைக்கப்பட்ட பொய் என்கின்றன..

மார்க்சுக்கு எந்த வகையிலும் பொருளாதார இக்கட்டு ஏற்படாமல் இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால் அவர் ஆடம்பரமாக வாழ்வதற்கு பொருளாதார உதவிகள் செய்தது Nathan Rothschild (ஜெர்மனியின் பாகாசுர வங்கி குழுமத்தின் தலைவர்) என்று குற்றம் சாட்டுகிறார் மார்க்சின் நெருங்கிய சகாவாக இருந்து பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்ற Mikhail Bakunin தன்னுடைய புத்தகமான Polemique contre les Juifs (Polemic Against the Jews)-ல். சாத்தானிய வழிபாட்டு கூறுகளான கட்டுக்கடங்காத குடியும், ‘இன்னப்பிர’ சமாச்சாரங்களும் அவரிடம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மார்க்சின் கம்யூனிச காம்ரேட் சகாக்களில் ஒருவரும் சாத்தானிய வழிபாட்டாளருமான Giuseppe Mazzini அவரைக் குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார்…..

"His heart bursts rather with hatred than with love towards men……. a destructive spirit.”

இந்தவரிசையில் அடுத்து வருபவர் அவருடைய உதவியாளர் Karl Heinzen.

(சந்தேகம், சாப்பாட்டிற்கே மார்க்சுக்கு எப்படி உதவியாளரை வைத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுப்படியானது)

Karl Heinzen தன்னுடைய புத்தகத்தில் மார்க்ஸ் கர்வம் பிடித்தவர் என்றும் தன்னுடைய பேச்சின் மூலம் பிறரிடம் காரியம் சாதித்துக் கொள்ளக் கூடியவர் என்றும் பிறர்தன் மேல் வைக்கும் நம்பிக்கையை வெகு அலட்சியப்படுத்துவார் என்றும் தனக்கு ஆகாதவர்களை ‘அழித்து விடுவேன்’ என்று மிரட்டும் வழக்கம் உடையவர் என்றும் குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் தன் மேல் வைக்கப்படும் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளவே மாட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

அவருடைய ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகள் குறித்து அவருடைய சர்வாதிகார போக்கு குறித்தும் யார் விமர்சனம் வைத்தாலும் அவர்களை தன்னுடைய எழுத்துக்களில் வகை தொகையின்றி தாக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளானவர்களில் முக்கியமானவர்களாக காட்டப்படுவது Dr Ludwig Kugelmann மற்றும் Bakunin.

மக்கள் சுரண்டப்படுவதை எதிர்த்த அவரே அவரை சுற்றி இருந்தவர்களை தன்னுடைய பேச்சாற்றளால் சுரண்டினார் என்றும் சொல்லப்படுகிறது.

போதுமடா சாமி என்று நிருத்திவிட்டேன்.

இவைகள் முதலாளித்துவத்தின் சதி வேலையா அல்லது யூத எதிர்ப்பு உள் குத்தா..

கம்யூனிசத்தின் இறுதி வெற்றிகளும் சொல்லி வைத்தார் போல சர்வாதிகாரத்தின் படிகளையே காட்டும் வரலாற்றின் உதாரணங்களையும் உதாசீணப் படுத்துவதற்கில்லை என்பது மட்டுமே இப்போதைக்கு எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் சமாதானம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.