இந்தியாவிலிருந்து சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவையை ஆகஸ்ட் 31-ம் தேதிவரை ரத்து செய்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் வர்த்தக ரீதியான சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ஆகஸ்ட் 31-ம்தேதி நள்ளிரவு 11.59 வரை நிறுத்தப்படுகிறது.
அதேசமயம், சர்வதேச அளவில் சரக்கு விமானப் போக்குவரத்தை விமானப்போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதில் எந்தவிதமான தடங்கலும் இல்லை.” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் கட்டுப்பாடுகளுடன், விதிமுறையைப்பின்பற்றி வர்த்தகரீதியற்ற விமானப் போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் மத்திய அரசு பேசி வருகிறது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.