மதுரை சித்திரை திருவிழா நடக்காமல் போகும் போது கொந்தளிக்காதவர்கள் ஏன் விநாயகர் ஊர்வல தடைக்கு மட்டும் கொந்தளிக்கின்றனர்...
ஆடி மாசம் முழுக்க மாரியம்மன் எனும் மழைத் தெய்வத்திற்கான கூழ் வார்த்தல் திருவிழா ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் கிராமங்களில் நடத்தப்படுகிறது. அது இந்த ஆண்டு கொரோனாவிற்காக நிறுத்தப்பட்டது. அப்போது இந்து முன்னணியினர் பொங்கவில்லை.
மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா நிறுத்தப்பட்ட போது, இந்து முன்னணியினர் பொங்கவில்லை.
ஆனால் தமிழ் மண்ணுக்கு பாரம்பரிய தொடர்பில்லாத விநாயகனின் ஊர்வலத்தை நிறுத்த சொல்லும்போது மட்டும் இந்து முன்னணி பதறுகிறது. இந்துக்களுக்கு ஊர்வலம் நடத்த உரிமையில்லையா என கொக்கரிக்கிறது.
ஏனென்றால் இந்து முன்னணி காரனுங்களைப் பொறுத்தவரைக்கும் ராமனும், விநாயகனும் ஆன்மீக அடையாளங்கள் அல்ல. அவை அரசியல் கருவிகள். ராமனையும், விநாயகனையும் வைத்து கலவரம் செய்து கட்சி வளர்த்ததுதான் அவர்களின் வரலாறு.
மாரியம்மன்கள் இந்து முன்னணி வலியுறுத்தும் பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிரானதாக இருக்கின்றன. அது உழைக்கும் மக்களின் தெய்வமாக இருக்கிறது.
மாரியம்மன் கோயில் பூசாரிகளாக பார்ப்பானர்கள் இருப்பதில்லை. அதனால்தான் மாரியம்மன் திருவிழாவை விட விநாயகன் சதுர்த்தியே இந்து முன்னணி கும்பலுக்கு முக்கியமானதாக இருக்கிறது.
விநாயகன் சதுர்த்தியை தடுக்கும் போது இந்துக்களுக்கு உரிமை இல்லையா என கதறும் சங்கிகள், மாரியம்மன் திருவிழாவிற்கு கதறுவதில்லை. காரணம் மாரியம்மன்கள் இந்துவல்ல. தமிழரின் பாராம்பரிய நாட்டார் தெய்வங்களில் ஒன்று...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.