சே, தில்லியில் இருக்கும் போது அவரை ஆல்-இந்தியா ரேடியோவிற்காக கே.பி.பானுமதி பேட்டி எடுத்தார்.
பானுமதியிடம் பேசிய போது, ‘சே நிறைய இடைவெளிவிட்டு ஒரு ஜோதிடர் போல் பேசினார்.
அவரது ராணுவ உடை, பெரிய பூட்ஸ்கள், மாண்டி கார்லோ சுருட்டு ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒரு புனிதத் துறவி போல் பேசினார்’எனக் குறிப்பிட்ட அவர்,
‘நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட். உங்களால் எப்படி பல மத சமூகத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது?’ என்று கேட்ட போது...
‘நான் என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டதே இல்லை. நான் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் நம்பும் ஒரு சோசலிஸ்ட்.
எனது பால்ய காலத்தில் இருந்தே லத்தீன் அமெரிக்க நாடுகளின் பசி, பஞ்சம், பட்டினி, வேலையின்மை ஆகியவற்றைப் பார்த்தே வளர்ந்தேன்.
மார்க்சியம் லெனினியக் கோட்பாடுகளில் உலகத்திற்குத் தேவையான பாடங்கள் இருக்கின்றன.
ஆனால், அதை சரிவர நடைமுறைப்படுத்துவதே மார்க்சின் கனவுகளை முழுமையடையச் செய்யும்.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு வழிவகுத்த காந்தியத்திற்கு என்று தனிப்பட்ட சக்தி இருக்கிறது.
லத்தீன் அமெரிக்கர்களான எங்களுக்கு உங்களைப் போல் காந்தியும் நீண்ட பாரம்பரியமும் இல்லை.
அதனால் தான் எங்களது மனநிலை வேறு விதமாக இருக்கிறது’ என்று சே பதிலளித்ததாகக் கூறினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.