வள்ளல்கள் என்று வரலாறு பலரைக் குறித்திருந்தாலும், பெரும்பாலான மன்னர்கள் பல்வேறு கொடைகளைச் செய்திருக்கின்றனர்.
பண்டைய வரலாறு, அவர்கள் அளித்த கொடைகளைப் பொறித்து வைத்த கல்வெட்டுகளினாலும் செப்பேடுகளினாலுமே தெரிய வந்தது என்று பார்த்தோம்.
அவர்கள் அளித்த முக்கியமான தானம் நிலங்களை இறையிலி நலமாக கோவில்களுக்கும் சில சில தனிப்பட்ட மனிதர்களுக்கும் அளித்திருக்கிறார்கள்.
இதில் தேவதானம் என்பது சிவன் கோவிலுக்கு அளிக்கப்படும் தானம்.
திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோவிலுக்கும் பள்ளிச் சந்தம் என்பது சமண பள்ளிகளுக்கும் வழங்கப்படும் தானம்.
நம் தமிழ் மன்னர்கள் எல்லா சமயத்தையும் போற்றி வந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது.
இது தவிர பிராமணர்களுக்கு கொடுக்கப்படும் தானத்தை பிரம்ம தேயம் என்றும் சோதிடர்களுக்கு வழங்கப்படுவதை கணி முற்றுட்டம் என்றும் அழைத்திருக்கிறார்கள்.
தானம் செய்யப் போகிற நிலத்தின் எல்லையை வகுக்க மன்னர்கள் கையாண்ட முறை விசித்திரமானது.
ஒரு பெண் யானையை குறிப்பிட்ட இடத்திலிருந்து நான்கு திசையும் நடக்கச் செய்து, அது நடந்த எல்லைகளைக் குறித்துக்கொண்டு, அதற்கு உட்பட்ட இடத்தைத் தானமாக வழங்குவது அக்காலத்தின் வழக்கமாக இருந்திருக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.