13/08/2020

சட்டசபையில் திமுக விடம் ஜனநாயகம் பட்டபாடு...



கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாவுக்கும் காதல் மலர்ந்தது. ராஜாத்தி அம்மாள் பிரசவத்துக்காக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது, மருத்துவமனையில் கணவர் பெயர் கேட்கப்பட... அவரும் கருணாநிதி, தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் என பதிவு செய்ய... அதன்பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கோவை திருமகன் என்ற உறுப்பினர், ‘பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதியை தனது கணவர் என்று ஒரு பெண் பிரசவத்தின்போது குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே திருமணமாகி மனைவியோடு இருக்கும் அமைச்சரை இன்னொரு பெண் கணவர் என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்?

இதற்கு அமைச்சர் என்ன சொல்கிறார்..? என்று கருணாநிதியின் மகள் கனிமொழி பிறந்த சமயத்தில் கேள்வி எழுப்ப,

அதற்கு கருணாநிதி எழுந்து, ‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள்...’ என்று சொல்லி விட்டு அமர்ந்து கொள்ள, அவையில் அடக்க முடியாத சிரிப்பாம்.

இப்படி ஒரு பெரிய பிரச்னையைக் கூட சமயோஜிதமாக யோசித்து, சிக்கலை சாதுர்யமாக தவிர்க்கும் கலை அவருக்கே உரியது.

அதேபோல, டைமிங் ஜோக் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்..! - கலைஞர் 50 , ஜூனியர் விகடன் (19-4-2007)

கருணாநிதிக்கு பதில் அந்த இடத்தில் வேறொரு அமைச்சர் பெயர் இருந்திருந்தால் இதே விகடன் வேறொரு மாதிரி எழுதியிருப்பான். அமைச்சரின் கள்ள தொடர்பு, சட்ட விரோதம், ஒரு அமைச்சர் இப்படி செய்யலாமா என போட்டு கிழிகிழியென கிழித்திருப்பான் விகடன்.

அரசாங்கத்தின் விளம்பரங்களை பெற இதைப்போய் டைமிங் ஜோக், சாதுர்யம் என கலர் கலரா ரீல் விடுறான்.

ஒரு அரசு ஊழியர் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தால் அது சட்டப்படி குற்றம். அவர் அரசு வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்." - இது தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிமுறைகளில் உள்ள ஒரு பகுதி. இதை கருணாநிதி மீறியபோது அது சாதுர்யமாம்.

இந்த கூத்தெல்லாம் சட்டசபை குறிப்பேட்டில் பதிவாகியிருக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.