ஊரடங்கு, பொருளாதார மந்த நிலை எதிரொலி இந்தியாவில் 2.1 கோடி சம்பளதாரர்கள் வேலை இழப்பு.. சி.எம்.ஐ.இ தகவல்..
ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் இந்தியாவில் சுமார் 2.1 கோடி சம்பளதாரர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். ஆகஸ்டில் 33 லட்சம் பேரும், ஜூலையில் 48 லட்சம் பேரும் தங்களது வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வேலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இந்தியாவின் முறையான வேலை வாய்ப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, கொரோனா ஊரடங்கு காரணமாக ஐந்து மாதங்களில், இந்தியா முறையான துறையில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவைக் கண்டது. இது நாட்டின் மிகப் பெரிய சம்பள வேலைவாய்ப்பு. ஊரடங்கை தளர்த்திய பிறகும், வேலை வாய்ப்புகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை போன்ற காரணங்கள் ஆகும்.
முன்னதாக, 2017-18 முதல் இந்தியாவில் வேலையின்மை ஒரு பிரச்சினையாக இருந்தது. 2019 மக்களவை தேர்தலுக்கு சற்று முன்னதாகவே வெளியிடப்பட்ட ஒரு அரசாங்க வேலை கணக்கெடுப்பு, நாட்டின் வேலையின்மை 2017-18 ஆம் ஆண்டில் நான்கு தசாப்தங்களாக உயர்ந்து 6.1 சதவீதத்தை எட்டியிருந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 2.1 கோடி சம்பளதாரர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நகர்ப்புறங்களில் வேலைகளை இழந்தவர்கள், விவசாயம் தங்களது பணியாக மாறியுள்ளதால், கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராமப்புற பொருளாதாரம் மட்டுமே நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது. பண்ணை வேலைவாய்ப்பு 14 மில்லியன் உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் தினசரி கூலித் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியதால் சாத்தியமானது.
ஆனாலும், ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 2.1 கோடி சம்பளதாரர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். இதன் காரணமாக 2019-20இல் 8.6 கோடியிலிருந்து கடந்த மாதம் ரூ.6.5 கோடியாக குறைந்தது. ஆகஸ்டில் 33 லட்சம் பேரும், ஜூலை மாதத்தில் 48 லட்சம் பேரும் தங்களது வேலையை இழந்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.