26/09/2020

59 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த வோடடோபோன், ஏர்டெல் நிறுவனங்கள்...

 


போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 45 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பு.

கடந்த ஜூன் மாதத்தில் வோடோபோன்-ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் 59 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

டிராய்' எனும் தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் தரவுகளின் படி ஜூன் மாதத்தில் வோடோபோன்-ஐடியா நிறுவனம் 48 லட்சத்து 20 ஆயிரம் வாடிக்கையாளர்களையும் ஏர்டெல் நிறுவனம் 11 லட்சத்து 30 ஆயிரம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.

அதேநேரம் இவற்றின் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 45 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. ஜூன் மாத இறுதி நிலவரப்படி செல்பேசி வாடிக்கையாளர்களில் 54.3 சதவீதத்தினர் நகர்ப்புறங்களையும் 45.7 சதவீதத்தினர் கிராமப்புறங்களையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. நாட்டில் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 68.7 கோடியிலிருந்து ஜூன் மாத இறுதிவாக்கில் 69 கோடியே 80 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் 5 பெரிய நிறுவனங்கள் 98.93 சதவீத பிராட்பேண்ட் மார்க்கெட்டை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் 39.8 கோடி பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், பார்தி ஏர்டெல் 15.13 கோடி வாடிக்கையாளர்களையும், வோடோபோன் ஐடியா நிறுவனம் 11.6 கோடி வாடிக்கையாளர்களையும், பிஎஸ்என்எல் நிறுவனம் 2.3 கோடி வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.