05/09/2020

தமிழ்நாடு அறிவித்த...பி.இ. அரியர்ஸ் மாணவர் தேர்ச்சி...ஏஐசிடிஇ ஏற்க மறுப்பு என தகவல்...



சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள பி.இ. அரியர்ஸ் மாணவர்களின் தேர்சசி முடிவை அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் ஏற்க மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த கல்வியாண்டுக்கான இறுதித் தேர்வை எழுத முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தேர்வு எழுதுவது குறித்து மாநிலங்களும் வெவ்வேறு முடிவுகளை அறிவித்து இருந்தன.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் அந்த கல்வியாண்டில் வாங்கி இருக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார். அதற்கு முன்பு 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழக்குமாறு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதையடுத்து கல்லூரி இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்தது. இத்துடன் அரியர்ஸ் தேர்வு எழுதுவதற்கு பணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி அளிக்குமாறு முதல்வர் அறிவித்து இருந்தார். இதற்கு தமிழக முழுவதும் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்களிடம் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. போஸ்டர்கள் அடித்தும் ஒட்டினர்.

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த பி.இ. அரியர்ஸ் மாணவர்களின் தேர்வு முடிவை அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரி ஏற்க மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து கொண்டாட்டத்தில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.