இதன் முதல் கட்டமாக சோதனை செய்ய போவது தமிழகத்தில் திருச்சியில் உள்ள கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, செறிவூட்டப்பட்ட அரிசி, அக்டோபர் முதல் வழங்கப்பட உள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசியில் வைட்டமின் ஏ, வைட்ட மின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, போலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் துத்தநாக சத்து ஆகிய 9 நுண் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதனை சாப்பிடுவதால், ரத்த உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை பிரச்னை ஏற்படாது என்று அரசு கூறுகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசி Cold Extrution தொழில்நுட்பத்தின் லைசினுடன் அரிசியை தயாரிப்பது ஆகும். சாதாரண அரிசியுடன் சேர்த்துதான் சமைக்க முடியும். தயாமின், நயாசின் அடங்கியுள்ள திரவத்தில் அரிசியை நனைத்து உலர வைத்து, இரண்டாவது பூச்சாக இரும்புச்சத்து மிக்க பைரோ பாஸ்பேட்டுகள் அதன் மேல் தூவி செறிவூட்டப்பட்ட அரிசியை தயாரிக்கிறார்கள். இந்த பூச்சுக்கள் நீரில் கரையாதது எனவே சமைக்கும் போதும் நீரில் கரைந்து விடாது. தமிழ்நாடு அரசு சத்துணவில் 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து சமைக்கிறது.
“செறிவூட்டப்பட்டவை” ஆரோக்கியமானதாகத் தெரிகிறது, இல்லையா? துரதிர்ஷ்டவசமாக, இந்த உணவுகள் செயற்கை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் “செறிவூட்டப்படுகின்றன” நம் உடல்கள் பெரும்பாலும் இதனை சரியாக செரிமானம் செய்யாது.
இந்த செயற்கை ஊட்டச்சத்துக்கள் உண்மையில் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பிளாஸ்டிக் அரிசி என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு சீன தொழிற்சாலைகளில் அரிசி தயாரிப்பது போன்ற காணொளிகள் வெளிவந்தது அனைத்தும் இந்த அரிசிதான்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அரிசியை தீட்டாமல் உண்டாலே இங்கு பாதி பிரச்சனை தீர்ந்து விடும். தானியங்களை தீட்டுவதால் ஏற்படும் உணவுச் சத்துக்களின் இழப்பு அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
15% கொழுப்பு, 82% தயாமின், 85% ரைபோபிளேவின், 70% பிரிடாக்ஸின் (உயிர்ச்சத்து B), 50% இயந்திரத்தில் தீட்டப்படுவதைப் பொருத்து அதிலுள்ள சத்துக்களின் இழப்பு ஏற்படுகிறது. அந்த பக்கம் அரிசியை பளபளன்னு ஆக்குறதுக்காக தீட்டுறோம். இந்த பக்கம் தீட்டுன அரிசியில ரசாயாணத்தை கலக்குறோம்.
பூமித்தாயின் மடியில் விலையும் நல்ல அரிசியை வெண்மை நிறத்தின் மீதுள்ள மோகத்தால் அளவுக்கதிகமாக தீட்டி வெண்மையாக மாற்றி, அதிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் நீக்கி, பிறகு சத்து குறைபாடு என்று தேவையற்ற அமிலங்களை சேர்த்து உண்ணும் இழி நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த உணவால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்று உலகம் இதுவரை ஆவணப்படுத்த வில்லை ஆனால் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தகவல்கள் மட்டும் கிடைக்கிறது. இதன் விஷத்தன்மை அறிய சில காலம் ஆகும். அதுவரை அதற்கு பலியாகப் போவது அரிசிக்கு கையேந்தி நிற்கும் தமிழக மக்களாகிய நாம் தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.