அமெரிக்கா என்ற நாடு உருவான வரலாறு தெரியுமா?
அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து அதன் பூர்வகுடிகளை கொன்றுவிட்டு (ஸ்பானியர்களுக்கு அடுத்ததாக) ஆங்கிலேயர் குடியேறிக்கொண்டனர்.
மிகப்பெரிய நிலம், குறைவான மக்கட்தொகை, கொழிக்கும் வளம் என ஆங்கிலேயர் நல்ல வசதியாக வாழத் தொடங்கினர்.
இவர்கள் தமது தாய்நாட்டையே எதிர்த்து போராடி தனிநாடு ஆனது ஏன் தெரியுமா?
இங்கிலாந்து அவர்கள் மீது விதித்த வரியும், தன்னிடம் தான் வணிகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் தான்.
அதாவது ஒரே தேசம்.. ஒரே வரி.. ஒரே வணிக வழி..
இதனால் அமெரிக்க மாநிலங்கள் தானே சுயமாக எந்த அரசுடனும் வணிகம் செய்ய முடியாத நிலை.
உற்பத்தி அனைத்தும் இங்கிலாந்துக்கே போனது.
இறக்குமதியும் அங்கிருந்தே வந்தது.
வரிச்சுமையும் அழுத்தியது.
இறுதியில் 13 ஆங்கிலேய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து 'ஒருங்கிணைந்த அமெரிக்க மாநிலங்கள்' அதாவது 'United States of America' ஆகி தம்மை குடிவைத்து பெரிய நிலம் கொடுத்து வாழ்வளித்த தமது தாய்நாடான ஆங்கிலேய பேரரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கின.
அது வாஷிங்டன் தலைமையில் விடுதலைப் போராட்டமாக வெடித்தது.
இராணுவத் தோல்வியையே காணாத நாடாக அன்று உலகின் கால்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாபெரும் ஆங்கில பேரரசு, தனது சொந்த இனத்தாலேயே மிகமோசமாகத் தோற்கடிக்கப்பட்டது.
அமெரிக்கா என்ற அறியப்படும் U.S.A உருவானது.
அதன்பிறகு மிக வேகமாக வளர்ந்த அமெரிக்கா நெப்போலியனிடம் லூசியானா பகுதியை விலைக்கு வாங்கி இரு மடங்காக பெருத்தது.
பிறகு அருகே குடியிருந்த ஸ்பானிய பகுதிகளையும் ஆக்கிரமித்து விடுதலைப் போரைத் தொடங்கிய வெறும் 100 ஆண்டுகளுக்குள் 6 மடங்கு பெருத்து வீங்கி..
பிறகு ரஷ்யாவிடம் அலாஸ்காவை விலைக்கு வாங்கி..
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரிய வல்லரசாக உருவெடுத்தது.
(ஸ்பானியரை ஆங்கிலேயருக்கு அறவே பிடிக்காது. இதுதான் ஸ்பானிய குடிவழி நாடான மெக்சிகோ மீதான வெறுப்புக்கு காரணம்)
இன்று அமெரிக்காவில் கால்வாசி மக்கள் ஆங்கில குடிவழிகள். ஆனால் எங்கும் எதிலும் இவர்கள் ஆதிக்கமே..
(கனடாவிலும் இதே நிலைதான், பிரெஞ்சு குடியேற்றப்பகுதியான கியூபெக் மட்டும் அங்கே விதிவிலக்கு)
ஆங்கில பேரரசைத் தோற்கடித்தாலும் ஆங்கில தாய்நாட்டுக்கு ஒன்றென்றால் பதறி ஓடி வந்து உயிரைக் கொடுத்து காப்பாற்றும் அமெரிக்கா..
அமெரிக்கர் மத்தியில் தாய்நிலத்திலிருந்து யாராவது வந்தால் அத்தனை மரியாதை..
தாய்நில ஆங்கில உச்சரிப்புக்கு அதாவது british english accent க்கு அத்தனை மதிப்பு..
அதாவது இனப்பற்றில் உலகில் ஈடு இணையே சொல்ல முடியாத ஆங்கில இனமே கூட தனது இனப்பற்றையும் மீறி தனிநாடு கேட்க காரணம் அவர்கள் மீது விதிக்கப்பட்ட வரியும் சுரண்டலும் தான்..
இங்கே நடப்பதும் கிட்டத்தட்ட அதேதான்..
வேறுபாடு என்னவென்றால் நாம் தாய்நாட்டால் சுரண்டப்படவில்லை..
வேற்றின ஹிந்தியரால் சுரண்டப் படுகிறோம்..
ஆங்கில அரசு அதன் குடியேற்ற மாநிலங்களைக் கொள்ளை தான் அடித்தது..
ஆனால் இந்தியா அதன் மாநிலங்களை கொள்ளையடிப்பது மட்டுமன்றி முற்றாக அழித்து விடவும் துடிக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.