11/10/2020

குடிப்பழக்கத்தை ஏன் நிறுத்த முடிவதில்லை?

 


குடிப்பழக்கம் மட்டுமல்ல வேறு எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்த முடியாது.

பாதிப்பு அதிகம் என்பதால், நாம் குடிப்பழக்கத்தைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.

மற்றபடி டீ குடிக்கும் பழக்கத்தைகூட நிறுத்துவதென்பது கடினமான ஒன்று தான்.

நாம் ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கங்கள் நம் நரம்பு மண்டலத்தில் சில தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது.

அந்த தூண்டுதல்களுக்கு பழக்கப்பட்டு விட்ட நமது நரம்பு மண்டலம். மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட அந்த செயலை செய்யுமாறு நம்மை தூண்டுகிறது.

எனவே சரியான ஆலோசனை மற்றும் அதற்குண்டான பயிற்சியினால் மட்டுமே ஒரு பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

மற்றபடி ஒரு முறை குடித்துவிட்டு ச்சே இனிமேல் குடிக்கவே கூடாது என நினைப்பதெல்லாம் குற்ற உணர்வால் ஏற்படும் சிந்தனைகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.