சரியாகத் தூக்கம் வரவில்லை என்றால் மட்டும்தான் 'தூக்கப் பிரச்னை’ என்று நினைப்பது தவறு. 'அதிகமாகத் தூக்கம் வந்தாலும் அது பிரச்னைதான்!’ என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இரவுத் தூக்கத்தின்போது தூக்கத்தில் மூச்சுத்திணறலினால் (Sleep apnea), மூளைக்கு சரியான அளவில் பிராணவாயு செல்லாமல் ஏற்படும் பக்கவிளைவுகள் சங்கிலித் தொடராக நீள்கின்றன.
இதனால், கோபம், தலைவலி, சக்தி இல்லாமை, மறதி போன்ற பிரச்னைகளோடு தாம்பத்ய ஈடுபாடும் குறைந்துபோகக் கூடும். இன்னும் அழுத்தமாகச் சொல்வதானால், பகலில் வாகனம் ஓட்டுகிற முக்கியமான தருணத்தில்கூட தூக்கம் வரக் கூடிய அபாயமும் உள்ளது.
இது மட்டும் அல்ல... தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்னைக்குச் சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபோது, ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை என்று அடுத்தடுத்தப் பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.