10/10/2020

தமிழ் சேர்ந்தது : மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்புக்கான தகுதி மொழிகளின் பட்டியலில் தமிழ் சேர்ப்பு...

 


தமிழ், சமஸ்கிருதம், கன்னடா, தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பிராகிருதம், அரேபிய, பெரிசிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தொல்லியல்துறை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் சேர தகுதியாக தமிழ்மொழியையும் சேர்த்துள்ளதாக  மத்திய தொல்லியல்துறை இணை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.