24/11/2020

திமுக ஊழல்வாதிகளே.. வரலாறு முக்கியம்...

 


கருணாநிதி பதவி தேவை இல்லை என்று ராஜினாமா செய்யும் அவ்வளவுக்கு நல்லவரா என்று யோசிக்கும் புதியதலைமுறை அரசியல் நோக்காளர்களுக்கு...

1969 ஆம் ஆண்டு அண்ணாதுரை இறந்த பின் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார்..

ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் வந்துவிட்டதால் 1971 யில் மீண்டும் தேர்தல் வந்தது. கருணாநிதி சைதாபேட்டையிலும் எம்ஜியார் பரங்கிமலையிலும் வெற்றி பெற்றனர்.

இதற்கு முன்னர் 1967 யில் திமுக முதல் முறை ஆட்சி அமைத்த பொழுதே அமைச்சருக்கு இணையான பதவியில் இருந்த எம்ஜியார் 1971 தேர்தலில் வெற்றியில் தன் பங்கும் இருக்கிறது என்ற எண்ணத்தில் அதற்கும் சற்றே பெரிய பதவியை எதிர்பார்த்து அமைச்சர் பதவி கேட்கிறார்.

கருணாநிதிக்கு எப்பொழுதும் இருக்கும் வஞ்சக எண்ணத்தில் அதை தர மறுக்க, எம்ஜியார் அதிர்ப்தியில் தி.மு.க வின் பொருளாளராக இருந்தமையால் கணக்கு வழக்கு கேட்க 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தி.மு.க விலிருந்து தற்காலிகமாக நீக்கினார் கருணாநிதி.

அடுத்த நாலு நாட்களில் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

அடுத்த மூன்று நாளில் அக்டோபர் 17 அன்று அண்ணா திமுகவை ஆரம்பித்தார் எம்ஜியார்.

மதியழகன் தான் அப்போதைய சபாநாயகர்.

கடந்த (1969 - 1971 ) ஆட்சியில் பதவியை துஷ்ப்ரயோகம் செய்ததாக கருணாநிதி மதியழகனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருந்தார், அதில் அதிர்ப்தியாய் இருந்த மதியழகன் எம்ஜியார் பக்கம் சாய்ந்தார்.

சபாநாயகரை கைக்குள் வைத்து கொண்டு எம்ஜியார் விளையாடியதை கருணாநிதி அவரை நீக்கி கூச்சல் குழப்பம் செய்து அடித்துடைத்தார்.

எம்ஜியார் இனி சட்டசபைக்கே வர மாட்டேன் என்று சபதம் செய்து வெளியேறினார்.

கருணாநிதியை எதிலாவது தோற்க்கடிக்க வேண்டும் என்று இருந்த எம்ஜியாருக்கு வகையாக வந்து சிக்கியது 1973 திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தல்.

எம்ஜியார் கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து திண்டுக்கலில் மாயதேவரை ஒருலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்தார்.

திமுக மூன்றாம் இடம் தான் பெற முடிந்தது.

அடுத்து வந்த பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்தது (சில நாட்களில் அந்த ஆட்சியை இந்திரா காந்தி கவிழ்த்தார்).

தொடர்ந்து எம்ஜியார் சட்டபைக்கு செல்வதை புறக்கணித்து திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்து வந்தார். திமுக ஊழல் கட்சியாக முழுவதுமாக உருவெடுத்தது இந்த காலகட்டத்தில் தான்.

எமர்ஜன்சி காரணமாக 1971 க்கு பிறகு 1977 யில் தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பாண்டிச்சேரியில் துரோகம் செய்த இந்திரா காங்கிரசின் உறவை முறித்துக் கொண்டு தனியாக நின்று எம்ஜியார் 130 இடங்கள் பெற்று அமோக வெற்றி முதல்வரானார்.

1979 ஆண்டு காங்கிரசிற்கு எதிராக கட்சிகளை திரட்டும் முயற்சியின் முகமாக திமுகவையும் அதிமுகவையும் இணைக்க ஜனதா கட்சியின் பிஜுபட் நாயக் தலைமையில் முயற்சி நடந்தது.

முதல் நாள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு விட்டு அன்று இரவே டெல்லி சென்று எம்ஜியாரை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எந்த கட்சிக்கு எதிராக திமுக தொடங்கப்பட்டதோ, எந்த கட்சி எம்ஜர்ஜன்சி சமயத்தில் திமுகவை ஒடுக்கியதோ அந்த கட்சியோடு கூட்டணி அமைத்தார் கருணாநிதி.

அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளே ஆனநிலையில் கருணாநிதி தூண்டுதலில் இந்திரா காந்தியால் ஆட்சி கலைக்கப்படடது.

அதன் பின் மே 28 1980 அன்று நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று முழங்கி காங்கிரசோடு கைகோர்த்து நின்றார் கருணாநிதி.

கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து நின்றார் எம்ஜியார்.

மக்களிடம் இருந்த அபரீதமான செல்வாக்கால் 38.75 சதவீத வாக்கு பெற்று மீண்டும் எம்ஜியார் முதல்வரானார்.

கடந்த தேர்தலை விட 11 தொகுதி குறைவாக பெற்றது கருணாநிதிக்கு விழுந்த பெரிய அடி, அத்தோடு காங்கிரசும் கருணாநிதியை கழட்டி விட்டது.

அத்தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி காங்கிரசும் எம்ஜியார் பக்கம் சாய்ந்த நிலையில் எம்ஜியாரை எதிர்த்து அரசியல் செய்ய வேற வழி இல்லாமல் தமிழீழ பிரச்சினையை கையில் எடுத்து 1983 ஆகஸ்ட் 10-ல் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து அன்பழகனை கூட்டிக்கொண்டு ராஜினாமா செய்தார்.

ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சிறிது காலத்தில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.

இந்த பதவியை ராஜினமா செய்வது போல செய்துவிட்டு அந்த பதவியில் சென்று அமர்ந்து கொண்டார் கருணாநிதி.

இது தான் அவரின் ஈழ தியாகம்...

இதை தான் இன்றைய திமுகவினர் தங்கள் தலைவரின் இணையற்ற தியாகம் என்று சொல்லி வருகின்றனர்.

இதில் ஒன்னொரு விசயமும் இருக்கிறது.

கருணாநிதி ராஜினாமா நாடகம் என்று தெரிந்ததால் தான் என்னவோ மக்கள் அதன் பின் 1984 டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் திமுகவை அசிங்கமாக தோற்கடித்தனர்.

கருணாநிதி தேர்தலில் நிற்காமல் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்த பொழுதும் கடந்த தேர்தலை விட 13 தொகுதிகள் குறைவாக பெற்றது திமுக..

தயவு செய்து இனியும் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக பதவியை தூக்கி எறிந்தார் என்று உடன்பிறப்புகள் சொன்னால் அவர்கள் மீது கையில் கிடப்பதை தூக்கி எறியுங்கள்.. அது காலில் கிடப்பதாக இருந்தாலும் சரி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.