17/11/2020

ஆவிகள் உலகின் அமானுஷ்யம்...

 


வவுனியா நெலுக்குளத்தில் நடந்த உண்மை சம்பவம்...

1989 ல் தயாவதி என்ற பாட்டி இறந்து போனார் இரண்டு நாட்கள் அவர் உடல் வீட்டில் இருந்தது.

இரண்டாவது நாள் தகனம் செய்ய ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேவாரங்கள் பாடிக் கொண்டிருக்கும் போது  அதிசயமாக அந்த பாட்டி எழுந்து அமர்ந்து விட்டார்.

வந்தவர்கள் பீதியில் கலவரமடைந்து விட்டார்கள்.

பின்பு அவர் சொன்ன விடயங்கள் அதிர்ச்சியாய் இருந்தது.

தான் ஒரு ஒத்தையடி பாதையில் இறந்து போன தனது தாயாருடன் நடந்து போகும் போது அங்கே நிறைய கல்லுகள் குவிந்து கிடந்ததாம் அதில் நிறைய இனம் தெரியாத நபர்கள் அமர்ந்து இருந்தனராம் ஒரு பாதை முடிவில் ஒருவர் வந்து ஒரு கதவை திறந்து விட்டாராம் ஆனால் தாயை மட்டும் தான் உள்ளே அனுமதித்தாராம் நீ இப்போது வரவேண்டாம் என பாட்டியை வெளியே தள்ளி விட்டானாம்.

கீழே பாட்டி முழித்து கொண்டார்.

இந்த சம்பவம் அறிந்த எல்லோரும் இன்றும் அவரை சந்தித்து செல்கிறார்கள் இதெல்லாம் பார்க்கும் போது அடுத்த ஜென்மம் உண்மையாக இருக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.