27/11/2020

கேரட் வைத்தியம்...

தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

மேலும், புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை, கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டுக்கு உண்டு.

உதாரணமாக, அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், கேரட் சாறை வாரத்தில் மூன்று தடவை வீதம் 2 மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.