12/12/2020

நியூட்டனின் 3ம் விதியும், தமிழரின் தலை விதியும்...

தமிழன் போராடவே மாட்டான்.

தமிழனுக்கு இனப்பற்றே கிடையாது.

தமிழனுக்கு உணர்ச்சியே கிடையாது.

தமிழனுக்காகப் போராடினால் நல்ல சாவுகூடக் கிடைக்காது.

என்றெல்லாம் வசைபாடுபவர்கள் கவனத்திற்கு..

எந்த ஒரு விடயத்திற்கும் ஒரு சரியான காரணம் உண்டு.

எளிதாகப் புரிய இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்.

நியூட்டனின் மூன்றாம் விதி தெரியும் தானே,

எந்த ஒரு விசைக்கும் சமமான நேர்எதிர்விசை ஒன்று இருக்கும்

இதை விளங்க ஒரு கைத்துப்பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள்.

(என்றாவது ஒருநாள் நீங்கள் உண்மையில் எடுக்கப்போவது தான்).

நாம் விசையை அழுத்தியதும் தோட்டாவிற்குள் இருக்கும் வெடிமருந்து தீப்பிடித்து வெடித்து தோட்டா முன்னே பாய்கிறது.

இதற்கு சமமான எதிர்விசை துப்பாக்கியையும் உங்கள் கையையும் பின்னோக்கித் தள்ளுகிறது.

இந்தவிதி எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.

சரி; தமிழரைக் குறைகூறும் பலர் தமிழர் மற்ற எந்த இனத்தையும்விட வரலாற்றில் வலுவாகத் தடம்பதித்ததையும் தமிழரின் பெருமையையும் திறமையையும் ஒப்புக்கொள்கின்றனர்.

மற்ற மக்களிடம் இல்லாத ஒரு சிறப்பு தமிழரிடம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

என்றால் அதற்கு சமமான எதிர்விளைவு அவர்களிடம் இருக்கும்தானே?

அதுதான் தமிழரின் மந்தப்போக்கு.

மற்ற இனங்கள் சிறிய சீண்டலுக்கே எகிறி அடிக்கிறார்களே..

தமிழர்கள் ஏன் எல்லாவற்றையும் பிடுங்கிய பிறகும் அசமந்தமாக இருக்கிறார்கள்? என்று நன்கு யோசித்ததில் இந்தப்பதில் கிடைத்தது.

மற்றவர்கள் கைத்துப்பாக்கிக்கோ அல்லது தோள்துப்பாக்கிக்கோ ஒப்பானவர்கள் அவர்களை வெடிக்கவைப்பது எளிது. ஆற்றலும் குறைவு.

ஆனால், தமிழர்கள் பீரங்கிக்கு சமமானவர்கள்... வெடிக்கவைப்பது கடினம் ஆனால் வெடித்தால் கோட்டைகளே தகர்ந்து போகும்..

ஈழத்தில் புலிகள் வெறும் முப்பதாயிரம்பேர்.

அவர்கள் கட்டுப்பாட்டில் நேரடியாக உதவியவர்கள் வெறும் ஐநூறாயிரம் (5லட்சம்) தமிழர், தூரத்திலிருந்து ஆதரவளித்தவர்கள் வெறும் இருநூறாயிரம் தமிழர் மட்டுமே..

ஆனால், இவர்களை அழிக்க ஐம்பதாயிரம் சிங்களப்படையினர், மூன்று வல்லரசு நாடுகள் நேரடி உதவி, இருபத்தியைந்து நாடுகள் தூரத்திலிருந்து உதவி.

வெறும் இருபத்தி ஐநூறாயிரம் (25லட்சம்) தமிழருக்கே இவ்வளவு பேரா?

என்றால் நாம் இந்த உலகில் பத்துகோடித் தமிழர் இருக்கிறோமே..?

நாம் ஒன்றிணைந்தால்..

நினைக்கவே நடுங்கிறது இல்லையா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.