17/12/2020

தெலுங்கு திமுக கட்சியும்... தமிழின அழிப்பும்...


உலகம் முழுவதும் ஆர்த்தெழுந்த தமிழர் போராட்டத்திற்கு இணையாக தமிழகத்தில் பள்ளி சிறார் முதல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வரை இனப்படுகொலைக்கு எதிராகத் திரண்டு எழுந்த சக்தியை ஆட்சியாளர் ஒடுக்கியது எதனால்?

தமிழ் ஈழம் மலர்வதை மத்திய மாநில அரசுகள் அறவே விரும்பாதது தான் முதல் காரணம்.

தமிழக முன்னால் முதல்வர் கருணாநிதி விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் மாவீரன் பிரபாகரனையும் எந்தக் காலத்திலும் ஆதரித்தது கிடையாது, ஈழம் மலர்ந்தால் தனக்கு மரியாதை குறைந்து விடும் என்னும் மனப்பான்மை கருணாநிதிக்கு உண்டு.

எனவேதான் இலங்கைத் தமிழருக்குத் தன்னைவிட யாரும் தலைமைத் தாங்கி போராடுவதை அவர் விரும்பவில்லை.

இதனால்தான் மனித சங்கிலி போராட்டம், சட்டமன்ற தீர்மானம், 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் என்று தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.

இதையும் மீறி பீறிட்டுடெழுந்த மாணவர் போராட்டத்தைப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுதலை அளித்துப் பிசுபிசுக்க வைத்தார்.

உயர்நீதிமன்றத்தில் ஆர்த்தெழுந்து போராட்டம் நடத்திய இனவுணர்வுள்ள வழக்கறிஞர்களை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்குக் காவல்துறையை ஏவி அடக்குமுறை செய்து ஒடுக்க முயன்றார்.

உணர்ச்சியுடன் ஈழத்திற்கு ஆதரவாக எழுச்சியுரை ஆற்றிய சீமான், அமீர், நாஞ்சில் சம்பத் போன்றவர்களைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தார்.

தமிழ் இன எழுச்சி ஏற்பட்டால் ஆட்சியாளர்களுக்கும் பதவிக்கும் ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்த காரணத்தால் ஒடுக்கினார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.