ஆந்திராவில் ரெட்டியார் இருக்கிறார்கள், நாயுடுகள் இருக்கிறார்கள், பிராமணர்களும், ஹரிஜன மக்களும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களை மொத்தமாக அழைக்கும் போது ஆந்திரர்கள் என்றோ தெலுங்கர்கள் என்றோ அழைக்கிறோம்...
அதைப் போலவே கேரளாவில் இருப்பவர்களை ஈழவர், நம்பூதிரி, நாயர் என்று பிரித்து பிரித்து அழைக்காமல் மலையாளி என்ற ஒரே பதத்தில் அழைக்கிறோம்...
அதே போலதான் திராவிடம் என்ற வார்த்தையும் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பெயராகவும் நிலம் சார்ந்த மக்களின் பெயராகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்..
எனவே திராவிடன் என்பது நிலத்தின் பெயரே தவிர இனத்தின் பெயரே இல்லை..
வேறொரு விஷயத்தையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
திராவிடம் என்பதை தமிழகத்தில் மட்டும் தான் இனம் சார்ந்த வார்த்தையாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பிற பகுதிகளில் அப்படி யாரும் பார்க்க வில்லை.
அவரவர் அவரவரின் மாநிலம் மற்றும் மொழி அடையாளத்தையே தங்களது பண்பாட்டின் அடையாளமாக பெருமையோடு காட்டுகிறார்கள்.
ஆரியர்கள், திராவிடர்கள் என்ற பாகுபாடும் பகுத்தறிவு வாதங்களும் சென்னையை தாண்டி பெங்களூரை கூட தொட்டது இல்லை பக்கத்தில் இருக்கும் திருவனந்தபுரத்துக்கு கூட அடியெடுத்து வைத்ததில்லை.
தமிழர்களாகிய நாம் மட்டுமே இன்னும் கால்டுவெல்லின் கற்பனை குதிரையில் பயணப்பட்டு கொண்டே வந்தேறிகளை வாழ வைத்து நாம் அடிமையாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.