24/01/2021

பேய்களின் திருவிழா...

 


திருவிழாக்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்..

இரவு திருவிழாக்களில் முக்கியமானது 'ஹேலோவீன்' என்பது..

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31 -ந் தேதி இரவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது..

கோடை முடியும் நேரம், பூமிக்கும் நரகத்துக்கும் இடையே உள்ள தூரம் குறைந்து விடும்.

எனவே பேய் பிசாசுகள் லோக்கல் சிட்டி பஸ்ஸில் பூமிக்கு வந்துவிடும் என்பது பண்டைய செல்டிக் மக்களின் நம்பிக்கை.

டவுன் பஸ் ட்ரிப்பில் சொந்தக்காரப் பேய்களும் வந்துவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

அந்த சொந்தக்காரர்களை தங்கள் வீட்டுக்கு விருந்தினர்களாக கூப்பிட்டு விருந்து வைப்பார்கள்.

கெட்ட ஆவிகளை வாசலிலேயே துரத்தி விடுவார்கள்..

மோசமான பேய்களை போலவே அன்றைக்கு மக்கள் மாறுவேஷம் போட்டுக் கொள்வார்கள்.

அட இது நம்ம ஆளுப்பா என்று கெட்ட ஆவிகள் ஏமாந்து, மனிதர்களை தேடி அடுத்த வீட்டுக்கு போகும்.

அங்கும் இப்படியே மனிதர்கள் வேஷம் போட்டிருப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு வீடாக அடைந்து ஏமாந்து மீண்டும் நரகத்துக்கே அந்த பேய் போய்விடும்.

அன்று விருந்துக்கு வரும் ஒவ்வொருவரும் டிராகுலா, வேம்பையர் என்று பதறவைக்கும் வேஷத்தில் அலறவைப்பார்கள்.

பூசணிக்காயில் பேய் உருவங்களை செதுக்கி உள்ளே லைட் போட்டு 'திகில் எபக்ட்' கொடுப்பார்கள்.

மண்டை ஓடு கேக், எலும்பு சாக்லேட், ரத்தக்கத்தி என்று இரவு சாப்பாடே மிரட்டலாக இருக்கும்.

ஒரு அறை முழுக்க பிளாஸ்டிக் எலும்புக் கூடுகளை அடுக்கி வைத்திருப்பார்கள்.

செட்டப் கல்லறைகள், நகரும் நிழல் உருவங்கள் என்று ஆவிகளை அலறவைப்பார்கள்.

விருந்து முடிந்ததும் திகில் படங்களை பார்த்து கூட்டமாக பயப்படுவார்கள்.

கன்னிப் பெண்கள் 'ஹேலோவீன்' இரவு அன்று தனியறையில் லைட் எதுவும் போடாமல் கண்ணாடியை பார்த்தால் அதில் எதிர்கால கணவனின் முகம் தெரியுமாம்.

ஒரு வேலை கண்ணாடியில் மண்டை ஓடு தெரிந்தால் அவ்வளவுதானாம்.

திருமணம் எதுவும் நடக்காமலேயே அந்த பெண் இறந்து விடுவாளாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.