ஆந்திராவில் ஆண்டுக்கு 150 தெலுங்கு படங்கள் வெளிவருகின்றன.
கர்நாடகாவில் 90 கன்னட படங்களும், கேரளாவில் 80 மலையாள படங்களும் மும்பையில் 220 இந்தி படங்களும் தயாராகி வெளிவருகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு நான்கு தமிழ்ப் படங்கள் வெளி வருகின்றன. அதுவும் வெளியில் தெரிய மாட்டேன் என்கிறது.
உலகில் படங்களில் மூன்று வகை இருக்கின்றன. நேரடி மொழிப படங்கள், ரீமேக் படங்கள் , டப்பிங் படங்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எங்கும் இல்லாத ஒரு வகை படங்களே வெளிவருகின்றன. அவற்றை நாம் மாற்றார் படங்கள் என்று சொல்லலாம்.
மாற்றார் வகை படங்களே தமிழில் ஏராளமாக வெளி வருகின்றன. ஒரு படம் தமிழ்ப்படம் என்று சொல்ல வேண்டுமானால், குறைந்தபட்சம் அதில் நடிக்கிற நடிகர் நடிகைகள் ஐந்து சதவீதம் பேர் தமிழர்களாக இருக்க வேண்டும். தொழில் நுட்ப கலைஞர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் கதாநாயகன், கதாநாயகியாவது தமிழர்களாக இருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்நாட்டின் நிலை அப்படியா இருக்கிறது. எம்ஜிஆர், படமும், ரஜினி படமும், கமலஹாசன் படமும் தமிழ்ப்படங்கள் இல்லை. அவை மாற்றார் நடித்த தமிழ்ப் படங்கள் . கதாநாயகன் எம்ஜிஆர். மலையாளி, கதாநாயகி ஜெயலலிதா கன்னடச்சி என்றால் அது எப்படி தமிழ்ப் படம் ஆகும்?
ரஜினி கன்னடன், ஐஸ்வர்யா ராய் மும்பைச்சி என்றால் அது எப்படி தமிழ்ப்படம் ? கமலஹாசன் ஆரிய பிராமணன், பூஜா குமார் பெங்காலி என்றால் அது தமிழ்ப்படமா ? இவை மாற்றார் நடித்த தமிழ்ப்படங்கள். மாற்றார் வகை தமிழ்ப்படங்கள் .
அப்படிப்பார்த்தால், எம்ஜிஆர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை, ரஜினி தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. விஷால் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. தமிழ்ப்படங்களில் இவர்கள் நடிக்கவும் முடியாது. அப்படியானால் சிவாஜி கணேசன் நடித்த படங்கள்? கணேசன் தமிழன் தான். ஆனால் கூட நடிக்கும் நாயகி வாணி ஸ்ரீ , கே. ஆர். விஜய, ஜெயலலிதா , சரோஜாதேவி இவர்கள் எல்லாம் தமிழச்சிகள் இல்லையே. இயக்குனர் தமிழராக இருக்க மாட்டாரே... அப்படியானால் அது எப்படி தமிழ்ப்படமாகும் ? சிவாஜியும் அதிக அளவில் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. மாற்றார் வகை தமிழ்ப்படங்களில் நடித்துக் கொடுத்து இருக்கிறார் அவ்வளவுதான்.
அப்படியானால் உண்மையான தமிழ்ப்படங்கள் வெளிவருகின்றனவா என்றால் அதிகம் இல்லை. வருடத்துக்கு நான்கு வருகிறது. அவையும் வெளியே தெரியாமல் வந்தவழி போய் விடுகிறது. இதில் தான் மாற்றம் வேண்டும்.
தமிழர் நடித்து, தமிழர் இயக்கும், தமிழ்ப்படங்கள் வெளிவர வேண்டும். அப்போது தான் தமிழ் மண்சார்ந்த கதைகள் படங்களாக வெளிவந்து தமிழர் மனத்திரையை விரிவுப்படுத்தி செம்மைப்படுத்தும். அந்த நாளுக்காக காத்திருப்போம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.