29/01/2021

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?


பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,

30 கலோரிகள்

3 கிராம் புரதச்சத்து

6 கிராம் கார்போஹைட்ரேட்

2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.