04/01/2021

இவைகள் இல்லாவிட்டால் வரும் காலங்களில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பீர்கள்...

1.முதலில் சிறிய இடம் கிடைத்தாலும் , அல்லது தோட்டத்தில் ஒரு காய்கறி தோட்டத்தை அமையுங்கள். அதில் நாட்டு விதைகளை பயன்படுத்துங்கள்.

 2.  நிலம் இருப்பவர்கள் விவசாயத்தை விட்டுவிடாதீர்கள். நிலம் இல்லாதவர்கள் தனியாகவோ அல்லது பலர் கூட்டு சேர்ந்தோ நிலம் வாங்கி விடுங்கள்.

3.  நெல் , நவதானிய வகைகள், மஞ்சள், எள், நிலக்கடலை  போன்றவற்றை இயற்கை முறை விவசாயம் மூலமாக பயிர் செய்யுங்கள்.

4.  வீட்டில் வாழை, தென்னை வேப்பமரம், தேவையான மூலிகை செடிகள் , பூச்செடிகள் இருக்க வேண்டும்.

5.  அருகில் உள்ள செக்கு இயந்திரத்தில் வேர்க்கடலை, எள், தேங்காய் கொப்பரை கொடுத்து எண்ணெய்களாக ஆட்டி பயன்படுத்துங்கள்.

6.  வீட்டில் ஒரு நாட்டு பசுமாடு வளருங்கள். பால் குறைவாக கிடைத்தாலும் முழுதும் வீட்டு தேவைக்கு பயன்படுத்துங்கள்.

7.  வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை ஒரு குழுவாக சேர்ந்து மொத்த விற்பனை செய்யும் இடத்தில் வாங்குங்கள் .தரத்தையும் விலை குறைவையும் பெறுங்கள்.

8.  திருமணத்திற்கும் மற்ற விசேஷங்களுக்கும் தேவையில்லாமல் ஆடம்பரமாய் பணத்தை செலவு செய்யாதீர்கள்.

9.   முடிந்தவரை சிக்கன வாழ்க்கைக்கு மாறுங்கள். நிறைய சேமியுங்கள். வங்கிகளில் மிக குறைவான அளவு பணத்தை மட்டுமே இருப்பு வையுங்கள்.

10.  எப்போதும் பொருட்களை இருப்பு வையுங்கள்.

வரும் காலங்களில் நிலம், இயற்கை வளம்,  விவசாயம், காய்கறி சந்தை, உணவு பொருட்கள் சந்தை ஆகியவைகளை கார்போரேட்டுகள் மிக அதிகமான அளவில் கையகப்படுத்த போகிறார்கள்.

உணவு பதுக்கல், செயற்கை பஞ்சம், விலையேற்றம், பட்டினி சாவுகள் நிகழலாம்.

வரும் காலங்கள் சிக்கலானவை..

சந்திக்க தயாராகுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.