படம் பார்த்தேன் . நம்முடைய முகநூல் பதிவுகளை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளனர் . குறிப்பாக மரபணுமாற்று தக்காளியில் தவளையின் ஜீன் உள்ளது . கடந்த பத்தாண்டுகளில் அண்டை மாநிலங்களின் சராசரி மழை அளவைவிட தமிழகத்தில் அதிகம் என்பது உட்பட. இயக்குனரை பாராட்டலாம்...
மரபணுமாற்ற கத்திரிக்காய்க்கு தடையாணை பெற்றவன் என்ற முறையில் மரபணு விதைகளை பற்றியும் இந்த சினிமா பேசுவது பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது..
நாடு என்ற வரையுரையை தமிழ்நாடு எங்கள் நாடு என்று படம் பேசுகிறது..
அதே நேரத்தில் சில சாதாரண அடிப்படை தகவல்கூட தெரியாமல் வசனம் எழுதப்பட்டுள்ளது . தற்போதுவரை விவசாய வருமானம் எவ்வளவு என்றாலும் வருமானவரி கிடையாது...
பூமி நல்ல முயற்சி...
கார்ப்பரேட்டுகளை எதிர்த்து எடுக்கப்பட்ட பூமி திரைப்படம் Disney+Hotstar என்ற வெளிநாட்டு கார்ப்பரேட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது வருத்தம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.