28/01/2021

தமிழ் தேசியம் vs திராவிடம்...

 


திராவிடம் : திராவிடம் என்பது திருவிடம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு...

தமிழ் தேசியம் : அப்போது, தமிழகத்தை திருவிடம் என்று எந்த தமிழ் இலக்கியத்தில், கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரத்தில் அழைக்கின்றனர்?

குறைந்தபட்சம் மொழியியல் ஒப்பாய்வாவது உண்டா?

(உண்மையில் இதற்கு ஆதாரங்களே இல்லை..இது உச்சரிப்பின் காரணமாக ஊகத்தால் வைக்கப்பட்ட வாதம்...)...

திராவிடம் : ..?

ஊகத்தின் அடிப்படையில் கூறப்பட்ட இந்த பதிலை உறுதியான பதில் போல் திராவிடவாதிகள் வைத்ததற்கு காரணம், தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு தமிழரை எப்படி வேற்று மொழிச் சொல் மூலம் அழைக்கலாம் என்று பிறர் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே.

அப்படி திராவிடம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்று தெரிந்து விட்டால் தமிழர்கள் அதற்கான தமிழ்ச் சொல் தேடிக் கண்டு பிடிக்கும் போது உண்மையை கண்டு கொள்வர்.

ஆகையால், திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லின் திரிபு தான் என்று உண்மையை மறைக்க முற்பட்டனர்.

இதற்கு ஈ.வெ.இராமசாமி நாயுடுவும் உடந்தை அவரது எழுத்துக்களே ஆதாரம்..

திராவிடம் தமிழர்க்கான அரசியல் அல்ல... தமிழரை ஏமாற்றுவதற்கான அரசியல்...

தமிழர் மண்ணில் தமிழரை அடிமைப்படுத்தி, தமிழரை அடக்கி அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழரே அறியாதவாறு உணராதவாறு, ஆதிக்கத்தில் இருந்த தமிழரல்லாதாரால் அரசாட்சி செய்ய உருவாக்கப்பட்ட அரசியல் (கருத்தியல்)...

ஆகையால், எப்படி பதில் சொன்னாலும் தமிழரால் திராவிடத்திற்கு ஆப்பு உறுதி...

உண்மையில், திராவிடத்திற்கான பொருளாக திராவிடம் கூறும் பொருள் அனைத்தும் தவறு...

வரலாற்றின் படி திராவிடர் (<த்ராவிட்) என்பது ஒரு குறிப்பிட்ட வகை பிராமணரைக் குறித்த சொல்...

இதைத் தான் திராவிடம் தமிழராகிய நம்மிடமிருந்து மறைக்கிறது...

உதாரணம் : மட்டப்பந்து வீரர் ராகுல் டிராவிட் பிராமணரை நினைவில் கொள்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.