பில்லி - ஒருவரை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல் ரீதியிலும், ஈர்த்து மந்திரவாதி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனது விருப்பப்படி செயல்லாற்ற வைப்பது.
சூனியம் - சூனியம் என்றால் வெறுமை என்று அர்த்தம். அதாவது ஒருவனை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல்ப்பாட்டிலும், பொருளாதார ரீதியிலும் ஒன்றும் இல்லாதவன் ஆக்குவது.
ஏவல் - எமது விருப்பத்துக்கு ஏற்ப மற்றவர்களை செயற்பட வைப்பது.
செய்வினை - தனது சொந்த வினைப்படி செயலாற்றும் ஒருவனை மாந்திரிக முறையில் பலவழிகளில் திசைதிருப்பி அவனை அழிந்து போக வைப்பது ஆகும்.
வசியம் - நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல். (அட நமக்கெல்லாம் இது ரொம்ப தேவைப்படுதே ).
மோகனம் - நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல். (அட இதுவும் தேவைப்படுதே ).
ஆக்ருஷனம் - எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல். (அட இதுவும் நல்லா இருக்கே காந்தம் மாதிரி கவருமாம் ).
ஸ்தம்பனம் - தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.
பேதனம் - கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.
வித்வேஷனம் - ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.
உச்சாடனம் - எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .
மாரணம் - மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது )...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.