இயற்கை வாழ்க்கையில் மரங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அதனால், நாம் மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக மரங்கள் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
1.போதி மரம் என்பது அரச மரம்.
2.அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.
3.இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.
4.அர்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒர் ஆலமரத்தடி.
5.நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.
6.வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.
7.வாகை மரத் தழை வாயு போக்கும்.
8.மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.
9.பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.
10.மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.
மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்..
ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.
ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது..
இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது.
அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்..
மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்…. இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.
மரம் நடுவோம் மழை பெறுவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.