14/02/2021

கரைநாட்டு இசையா? கர்நாடக இசையா?

 


தமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு.

தமிழிசை என்பது தான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறுபட்டவை அல்ல. ஒன்றே.

வடக்கில் உள்ள பல நாடுகளில் கடல் இல்லை. அதனால் கடற்கரையும் இல்லை. ஆனால் தமிழகமோ மூன்று பக்கங்களிலும் கடல்களையும் கடற்கரைகளையும் கொண்டது. சோல மண்டல கடற்கரை, பாண்டி மண்டலக் கடற்கரை, சேர மண்டலக் கடற்கரை என்ற பெயர்கள் இன்றுவரை மக்களிடையே காணப்படுகின்றதாம்.

இதனால் தமிழகத்தைக் கரை நாடு என்றும் தமிழிசையைக் கரை நாட்டு இசை எனவும் வடக்கேயுள்ளனர் குறிப்பிட்டு வந்தனராம். அதையே பலரும் கர்நாட்டிசை என்றனர்.

ஆங்கிலேயனும் அதை கர்நாட்டிக் இசை என்றான். ஆகவே கரை நாட்டு இசை என்பது தமிழ் இசையைக் குறிப்பது.

காலப்போக்கில் வடமொழியின் மீது பற்றும், வட நாட்டின் மீது காதலும் கொண்ட சிலர், கரை நாட்டு இசையை, வட நாட்டு இசை என்றும், தமிழிசை இதற்கு முற்றும் மாறானது என்றும் கூறத் தொடங்கினர்.

தமிழில் உள்ள இசைக்கலை நூல்கள் வடமொழியில் பெயர்த்து எழுதினர். முன்னால் பதிவில் சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள தமிழிசைப் பற்றி சிரு விளக்கம் உள்ளது. இதுவே, தக்கச் சான்றாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.