19/03/2021

தமிழர் என்பது தாய்மொழி சார்ந்த இன அடையாளம்....

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராட்டிரா, குஜராத், டெல்லி, மேற்கு வங்காளம், மணிப்பூர் என்று இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் வசிக்கிறார்கள்.

அங்கெல்லாம், தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள்,  இன்று வரை தமிழர்கள் என்றே அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.

அங்கே சில நூற்றாண்டுக்கும் மேலாக வசித்தாலும், அவர்கள்  மலயாளியாக, கன்னடராக, தெலுங்கராக, மராட்டியராக, குஜராத்தியாக, டெல்லிகாராக, வங்காளியாக, மணிப்புரியாக ஆக முடியாத போது..

தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள் என்பதற்காக, இங்கு மட்டும் பிற மொழியாளர்கள் எப்படி தமிழர்களாக ஆக முடியும்?

தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளாக வசிக்கிறோம், 800 ஆண்டுகளாக வசிக்கிறோம் என்ற காரணத்தால், மாற்று மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள் ஆகிவிட முடியாது.....

தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள்..

தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரும் தமிழ்நாட்டின் குடிமக்கள்.  இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது....

இனம் என்பது வேறு.....

இருப்பிடம் என்பது வேறு....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.