04/03/2021

மறவோம்.. நினைவில் வைத்திருப்போம்...


மறவோம்.. நினைவில் வைத்திருப்போம். இந்த இரு வார்த்தைகள் தான் யூதர்களின் பொன்மொழியாக உள்ளது.

யூதர்கள் 5000 ஆண்டுகள் அடிமைப்பட்டு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆட்பட்டார்கள். தங்கள் இனம் அழிக்கப்பட்ட வரலாறை அவர்கள் மறக்காமல் நினைவு கூர்ந்தே வந்தனர்.

தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்த்மஸ் போன்று யூதர்களுக்கு ஒரு பெருவிழா உண்டு. அந்த நாளில் அவர்கள் வேப்பங்காயை விட பல மடங்கு கசக்கும் ரசத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் அருந்துவார்கள்.

அப்போது மத குரு ஒருவர் தன் இனம் பட்ட துயர வரலாற்றை,கடந்து வந்த பாதையை கூறுவார். நம் இனம் பட்ட துயரத்தை மறக்காமல் என்றும் நினைவில் வைத்திருந்ததால் தான் அவர்களால் போராடி இஸ்ரேல் என்ற நாட்டை 1948 -ல் அடைய முடிந்தது.

தமிழின மக்களும் தம் துயரங்களை ஒரு போதும் மறக்காமல், தொடர்ந்து போராடி தமிழீழத்தை தமிழகத்தையும் வெல்வோம் என்று தினமும் சூளுரைப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.